தெலங்கானா புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி: புதிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (CLP) கூட்டம் கச்சிபௌலியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்கரே, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலங்கானா மாநில புதிய முதல்வர் யார்? இறுதி செய்த காங்கிரஸ்


செய்தி ஊடகமான ANI இன் படி, ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (Congress Legislative Party) கூட்டத்தில், தெலங்கானா மாநிலத்திற்கு முதல்வரை தேர்ந்தெடுப்பது பற்றி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது எனவும், முதல்வரை நியமிப்பதற்கான இறுதி முடிவு கட்சி உயர் மட்டக்குழு கட்டளைக்கு விடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க - தெலுங்கானா தேர்தல்... முன்னாள் - இன்னாள் முதல்வர்களை தோற்கடித்த பாஜக வெங்கட் ரமண ரெட்டி!


புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பெயர் பரிந்துரை


சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற ஆட்சி அமைத்த காங்கிரஸ், அம்மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ரேவந்த் ரெட்டியின் பெயரை இறுதி செய்துள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்பார்கள் எனவும் தகவல்


காங்கிரஸின் வெற்றி முகமாக ரேவந்த் ரெட்டி


தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றிப் பிரசாரத்தின் முகமாக இருந்த ரேவந்த் ரெட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதற்கு தெலுங்கானா மாநில காங்கிரஸில் சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நேற்று மாலை நடைபெற இருந்த முதல்வர் பதவிக்கான பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் விவாதம் நடைபெற்றது. 


ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள்


ரேவந்த் ரெட்டி எதிர்ப்பாளர்களில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் என் உத்தம் குமார் ரெட்டி, முன்னாள் சிஎல்பி தலைவர் பாட்டி விக்ரமார்கா, முன்னாள் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட ரெட்டி, முன்னாள் துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்மா ஆகியோர் அடங்குவர். இவர்கள் ரேவந்த் ரெட்டியின் வேட்புமனுவை எதிர்த்தனர். அதற்கு காரணமாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளையும், ரேவந்த் ரெட்டியின் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் மோசமான செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. 2021 இல் தெலுங்கானா காங்கிரஸின் பொறுப்பை ரேவந்த் ரெட்டியிடம் வழங்கியபோது பெரும் சவாலை எதிர்கொண்டார்.


மேலும் படிக்க - தெலங்கானா முதல்வர் ரேஸ்... மல்லு பாட்டி விக்ரமார்கா vs ரேவந்த் ரெட்டி - யார் இவர்?


தெலுங்கானாவில் பெரும்பான்மையை பெற்ற காங்கிரஸ்


தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பிஆர்எஸ் 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு ஆட்சி அமைக்க எந்த ஒரு கட்சிக்கும் 60 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸ் 39.40 சதவீத வாக்குகளும், பிஆர்எஸ் 37.35 சதவீத வாக்குகளும், பாஜக 13.90 சதவீத வாக்குகளும் பெற்றன.


32000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரேவந்த் ரெட்டி


ரேவந்த் ரெட்டி, கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் வேட்பாளர் பி நரேந்திர ரெட்டியை 32000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, முதல்வர் பதவிக்கான போட்டியில் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டு முறை ஆட்சி அமைத்த பிஆர்எஸ்


கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு உதயமான தெலங்கானா மாநிலத்தில், அன்றைய மக்களவை தேர்தலுடன் சேர்ந்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில், பிஆர்எஸ் (அப்போது டிஆர்எஸ்) 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளையும் கைப்பற்றியன. 


அடுத்த சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்னரே ஆட்சி கலைக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டிலேயே தெலங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பிஆர்எஸ் 88 தொகுதிகளையும், காங்கிரஸ் 19 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 7 தொகுதிகளையும் கைப்பற்றின.


மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ