Congress MP DK Suresh: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷ், இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்து, தென் இந்தியா மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும், இதே நிலை தொடர்ந்தால் தனி நாடு கோரிக்கையை எழுப்புவோம் எனக்கூறிய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனி நாடு கோரிக்கை -காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ்


நாடாளுமன்றத்திற்கு வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்து பேசிய கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ், "தென் இந்தியா மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய வரியை வழங்காமல், தென் இந்தியா மாநிலங்களுக்கு அநீதியை இழைத்து வருகிறது. மத்திய அரசு போதிய நிதியை அளிக்கவில்லை என்றால், தனி நாடு கோரிக்கை விடுப்பதை தவிர வேறு வழியில்லை என்றும அவர் கூறினார்.


இது தேர்தல் பட்ஜெட் -எம்.பி. சுரேஷ்


செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி, "பட்ஜெட் குறித்து, இதில் புதிதாக எதுவும் இல்லை. இது தேர்தல் பட்ஜெட். இடைக்கால பட்ஜெட்டில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளன. அவர்கள் சில சமஸ்கிருதப் பெயர்களை அறிமுகப்படுத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்" என்றார்.


தென்னிந்திய மாநிலங்களின் பணம் வடமாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது -சுரேஷ்


நாங்கள் எங்களின் உரிமைக்கான நிதியை மட்டுமே கோருகிறோம். தென் இந்தியா மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான பங்கை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை. தென் இந்தியா மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. தென் இந்தியா மாநிலங்களில் இருந்து வசூலாகும் பணம் வட இந்தியா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம்" என்றார்.


மேலும் படிக்க - Breaking News: தமிழ்நாடு பட்ஜெட் தேதி அறிவிப்பு... ஆளுநர் உரை குறித்தும் அப்டேட்!


தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி -சுரேஷ்


தற்போது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதி விநியோகம் செய்வது சரியான முறையல்ல. நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் நிதியை பார்த்தால், நமது மாநிலங்களின் நிதி வட மாநிலங்களுக்குத் திருப்பி விடப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 4 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு எங்களிடமிருந்து பெறுகிறது, அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகக் குறைவு. தென் மாநிலங்களுக்கு மானியம் ஒதுக்குவதில் எப்போதும் அநீதி இருக்கிறது. இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால், அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கூறினார்.


பாஜக எம்பி  கண்டனம்


கர்நாடகா காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் கூறியதற்கு கண்டனம் கிளம்பியுள்ளது. தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்க டி.கே. சுரேஷ் விரும்புகிறார் என்று பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.


அண்ணனுக்கு ஆதரவாக பேசிய டி.கே.சிவகுமார்


மறுபுறம், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "நான் ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் மக்களின் கருத்தை மட்டுமே தெரிவித்திருக்கிறார். மக்கள் புறக்கணிக்கப்படுவதால் தான் இப்படி நினைக்கிறார்கள். நாடு ஒன்று தான் என தனது சகோதரன் கருத்து பதில் அளித்துள்ளார். 


மேலும் படிக்க - 'பாஜகவின் நாசகாரச் செயல்...' CAA-வை தமிழகத்தில் கால்வைக்க விடமாட்டோம் - ஸ்டாலின் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ