Breaking News: தமிழ்நாடு பட்ஜெட் தேதி அறிவிப்பு... ஆளுநர் உரை குறித்தும் அப்டேட்!

Tamil Nadu Budget Session 2024 Announcement Date: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2024, 05:59 PM IST
  • ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டு நாள்கள் நடைபெறும்.
  • பட்ஜெட் தாக்கல் பிப். 19ஆம் தேதி செய்யப்படும்.
  • சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்துள்ளார்.
Breaking News: தமிழ்நாடு பட்ஜெட் தேதி அறிவிப்பு... ஆளுநர் உரை குறித்தும் அப்டேட்! title=

Tamil Nadu Budget Session 2024 Announcement Date Today in Tamil: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்தும், ஆளுநர் உரை மீதான விவாதம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை முதன்மை செயலாளரான கி.சீனிவாசன் வெளியிட்ட செய்தி குறிப்பில், "2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத் தொடரிலேயே, அதாவது பிப். 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் பிப்.12ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அதில், தமிழ்நாடு ஆளுநர் (ஆர்.என். ரவி) உரை நிகழ்த்த உள்ளார்கள். 

மேலும் படிக்க |  Budget 2024: இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு... ரயில்வே துறைக்கு என்னென்ன பலன்கள்?

2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், 2024-2025ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்றும், 2023-2024ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதிநாள்), வரும் பிப்ரவரி 21ஆம் தேதி (புதன்கிழமை) அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்" என குறிப்பிட்டுள்ளார். 

முதல் பட்ஜெட்...

மேலும் இந்தாண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதன்முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். மேலும், விவாசயத்துறைக்கான பட்ஜெட்டும் அடுத்த நாளே வெளியாகும் எனவும் தெரிகிறது. முன்னதாக கடந்த மூன்றாண்டுகள் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். 

கடந்தாண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில், தொழில்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். மேலும், கடந்தாண்டு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இந்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஏதேனும் சிறப்பான அறிவிப்புகள் வெளியாகுமா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக, மக்களவையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஜார்கண்ட் பரபரப்பு: ஆட்சி அமைக்க கோரிக்கை! 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கிய ஆளுநர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News