இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு  புதிதாக கோவிட் -19 (Covid-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.  சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16.79 லட்சமாக உள்ளதாக, சனிக்கிழமை காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது., 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு எண்ணிக்கையும் 1.45 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,341 இறப்புகளும் பதிவாகியுள்ளன.


இந்நிலையில், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த, இந்திய ரயில்வே (Indian Railway) சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) புதிய COVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 


ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்


சில நாட்களுக்கு, ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மா ரயிலில் பயணிக்க கோவிட் -19 நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று கூறினார். இது தவிர, பயணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்ட சமீபத்திய COVID-19 வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால் ₹500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே கூறியிருந்தது. 


மாஸ்க் அணியாமல் இருத்தல், துப்புதல் போன்ற செயல்களுக்கு,  2012 ஆம் ஆண்டின் இந்திய ரயில்வே (ரயில்வே வளாகத்தில் தூய்மையை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான அபராதம்) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COVID-19 தொற்றுநோய் தொடர்பான சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சமைத்த உணவு சேவையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ரயில்களில் ரெடி டு ஈட் (RTE) உணவை வழங்கத் தொடங்கியது.


இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரயில் சேவைகள் நிறுத்தப்படுமா என கேட்கையில், ரயில் சேவையை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ எந்த திட்டமும் இல்லை என்று ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக மொத்தம் 1402 சிறப்பு ரயில் சேவைகளை இயக்கி வருவதாக, ஏப்ரல் 9 ம் தேதி அன்று இந்திய ரயில்வே கூறியது.


ALSO READ | வீட்டின் படிக்கட்டுகள், வாழ்க்கையின் படிக்கட்டுகளாகவும் இருக்க சில Tips!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR