COVID உச்சியை நாம் தாண்டி விட்டோமா அல்லது டிசம்பரில்தான் உண்மையான தாண்டவமா!!
அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மீட்பு வீதமும் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. COVID-19 இறப்பு விகிதம் 1.5 சதவீதத்திற்கு குறைந்துள்ளது.
புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக இந்தியா COVID-19 தொற்றுநோயின் போக்கில் சரிவைக் கண்டு வருகிறது. செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்த உச்சத்தின் பாதி அளவிற்கு தற்போதைய எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், டிசம்பர் மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதால், இப்போது எந்தவொரு முடிவுக்கும் வர முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
தினசரி தொற்றுக்கான ஒரு வார சராசரி அளவு வியாழனன்று 47,216 ஆக கணக்கிடப்பட்டது. இது செப்டம்பர் 17 ஆம் தேதி 90,000 ஆக இருந்தது. அப்போது, ஒரே நாளில் 97,894 தொற்றுகள் பதிவாகின. அதாவது, இந்த வாரத்திற்கான COVID-19 சராசரி, நாம் இதுவரை கண்டுள்ள தொற்றுநோயின் மோசமான நாட்களின் சராசரியை விட 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, நாட்டின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையும் அதிகபட்சமான 1,176 என்ற எண்ணிக்கையிலிருந்து அக்டோபர் 29 அன்று 543 ஆகக் குறைந்தது.
அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மீட்பு வீதமும் (Recovery Rate) 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. COVID-19 இறப்பு விகிதம் 1.5 சதவீதத்திற்கு குறைந்துள்ளது.
ALSO READ: ‘COVID-19 தடுப்பு வருந்து வழங்கலுக்கு தயார் நிலையில் இருக்கவும்’: Centre to States
இருப்பினும், உலகெங்கிலும் காணப்படுவது போல், பல நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப, குளிர் காலம் தொடங்கிவிட்ட பல மேற்கத்திய நாடுகளில் தொற்றின் அடுத்த அலை வீசத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் (India) ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், நாட்டின் சில பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் அதன் அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பாக, ஒரே நாளில் 5,891 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளானார்கள். இதன் மூலம், தேசிய தலைநகரின் கொரோனா வைரஸின் எண்ணிக்கையை 3.81 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 5,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தலைநகரில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளார். எனினும், இன்னும் ஒரு வாரம் கழித்து, நிலவரத்தை ஆராய்ந்த பிறகு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.
பண்டிகைக் காலம் மற்றும் அதிகரிகும் மாசுபாடு ஆகியவை COVID-19 தொற்றின் திடீர் உயர்வுக்குக் காரணம் என கூறப்படுகிறது. நவராத்திரி, துர்கா பூஜா கொண்டாட்டங்கள் அக்டோபர் 25 அன்று முடிவடைந்த நிலையில், அடுத்த பெரிய திருவிழாக்களான தீபாவளி மற்றும் சத் பூஜை நவம்பரில் கொண்டாடப்படும்.
இதற்கிடையில், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் (Maharashtra) வெள்ளிக்கிழமை 6,190 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக இருந்தது.
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR