மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள்!!
இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சுமார் 78 நாட்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சுமார் 78 நாட்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். தற்போது மொத்த கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,13,08,846 ஆக உள்ளது என்று வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினசரி 117 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,58,306 ஆக அதிகரித்துள்ளது என்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,97,237 ஆக அதிகரித்துள்ளது. இது இப்போது மொத்த தொற்றுநோய்களில் 1.74 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 23,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில், புதிய தொற்றுகளின் அளவு இரண்டு மாதங்களில் இல்லாத அளவு மிகவும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மீட்பு வீதம் 96.86 ஆக குறைந்துள்ளது.
டிசம்பர் 24 அன்று, 24 மணி நேரத்திற்குள் 24,712 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகின.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை கடந்தது. இந்த எண்ணிக்கை அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியையும் தாண்டியது.
ALSO READ: அதிகரிக்கும் Corona, இந்த இடங்களில் மீண்டும் Lockdown போடப்படுமா?
ICMR-ரின் படி, மார்ச் 11 வரை 22,49,98,638 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 7,40,345 மாதிரிகள் வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டன.
வியாழக்கிழமை 7,40,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இதுவரை செய்த ஒட்டுமொத்த சோதனைகள் 22,49,98,638 ஆகும். ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ (Covaxin) ஆகியவற்றிற்கான ஒப்புதலுக்குப் பிறகு ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி அளிப்பதற்கான செயல்முறை நாட்டில் துவங்கியதிலிருந்து, இதுவரை, கொரோனா தடுப்பூசியின் 2,61,64,920 டோஸ்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், டெல்லியில் புதிதாக 409 பேர் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சுமார் இரண்டு மாதங்களில் மிக உயர்ந்த ஒற்றை நாள் அளவாகும். நேர்மறை விகிதம் 0.59 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 10,934 ஆக உயர்ந்தது என்று டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.
ALSO READ: மறக்கமுடியாத உதவி, மிக்க நன்றி: விளம்பரப் பலகை வைத்து பிரதமர் மோடியை பாராட்டிய Canada
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR