புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) அனுமதிப்பதை உலக சுகாதார நிறுவனம் மேலும் தாமதப்படுத்தியுள்ளது. கோவாக்சின் குறித்த கூடுதல் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் WHO கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசிக்கான EUA கிடைக்க இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என்று ANI தெரிவித்துள்ளது. இந்த தாமதம் இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களையும் சர்வதேச பயணத் திட்டங்களைக் கொண்டிருக்கும் நபர்களையும் பாதிக்கும்.


EUA கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இந்த அங்கீகாரம் இல்லாமல், கோவாக்ஸின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாது.


தடுப்பூசி (Vaccine) குறித்த நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு (SAGE) அக்டோபர் 5 ஆம் தேதி, கோவாக்சினுக்கான EUA குறித்து முடிவெடுக்க கூடுகிறது. முன்னதாக ஏஎன்ஐ-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பிரவின் பாரதி பவார், “ஆவணங்களை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் நடைமுறை உள்ளது. WHO இன் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.



ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…


நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர் வி.கே.பால், செய்தியாளர் சந்திப்பில், WHO EUA செப்டம்பர் கடைசி வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.


பாரத் பயோடெக்கின் மூன்றாவது கட்டத்தின் படி, கோவாக்ஸினின் மருத்துவ பரிசோதனைகள் 77.8 சதவிகித செயல்திறன் விகிதத்தை நிரூபித்தன.


கோவாக்சின் தொடர்புடைய அனைத்து சோதனை தரவுகளும் WHO க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் UN சுகாதார நிறுவனம் கேட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கான விளக்கங்களும் பாரத் பயோடெக் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.


"WHO கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் நாங்கள் பதிலளித்தோம். அவர்களுடைய பின்னூட்டத்துக்காக காத்திருக்கிறோம். தடுப்பூசித் துறையில் பல அனுபவத்தைக் கொண்டுள்ள பொறுப்பான உற்பத்தியாளராக, ஒப்புதல் செயல்முறை மற்றும் அதன் காலக்கெடு பற்றி ஊகிப்பதோ அல்லது கருத்து தெரிவிப்பதோ பொருத்தமானதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை” என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுவரை, ஐநா பொது சுகாதார நிறுவனம், ஃபைசர்-பயோஎன்டெக், அமெரிக்க மருந்தியல் நிறுவனங்களான ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, சீனாவின் சினோஃபார்ம் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளது.


ALSO READ: இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களில் 100% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR