பள்ளிகள் மூலம் கொரோனா தொற்று பரவாது: WHO

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 68% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2021, 09:50 AM IST
  • சுமார் 68% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி வருகிறது.
  • கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் தேவையற்றது.
  • பெரும்பாலான மாநிலங்களில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
பள்ளிகள் மூலம் கொரோனா தொற்று பரவாது: WHO title=

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இரண்டவது அலை (Corona Second Wave) தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் மக்கள் மனதில் இன்னும் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் வகுப்புகள் தொடங்கினாலும், 1-8 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குவது குறித்து சில மாநிலங்களில் ஆலோனைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் நேற்று  செய்தியாளர்களிட்ம் பேசிய போது,  நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 68% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி வருகிறது. அதனால், கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் தேவையற்றது எனக் கூறியுள்ளார். 

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல்,  சானிடைஸர்கள் பயன்படுத்துதல், சுகாதாரத்தை பராமரித்தல், தடுப்பூசி போடுதல்ஆகிய வழிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முறையாக பின்பற்றினால் தொற்று நோய் பரவலை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குழந்தைகளுக்கு பள்ளிகளை திறக்க நேரடி வகுப்புகளை விரைந்து தொடங்கி, குழந்தைகளுக்கு பள்ளி சூழலில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைவிஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகளில் பபங்கேற்கு வசதி பலருக்கு கிடைக்கதா நிலையில், குறிப்பாக கிராமப்புறங்களில் 40 சதவீதம் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாத நிலையில், பள்ளிகளை திறக்கப்பட்டு, குழந்தைகள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதால், பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என உகல சுகாதார அமைப்பின் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். 

ALSO READ |மக்களே கவனம்! தமிழகத்தில் இன்று தடுப்பூசி இல்லை

பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் , குழந்தைகள் வேறு காரணங்களுக்காக வெளியில் செல்கிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் பள்ளிகள் மூலம் தொற்று பரவ வாய்ப்பும் இல்லை என சவுமியா சுவாமிநாதன்  

மற்ற தொற்று நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளது உள்ளது போல், கொரொனா வைரஸ் தொற்று வராமல் தடுக்கவும் நம்மிடம் மருந்து உள்ளது என்பதை புரிந்து கொண்டும், வீண்அச்சத்தை தவிர்த்து  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரலாம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் சவுமியா சுவாமிநாதன், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும் என்று அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  அப்படியே அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும். பெரியவர்களில் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை போலவே, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் இருப்பது, ஜூலை மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News