Covaxin: குழந்தைகளுக்கு செலுத்த விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தகவல்

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) மே 11 அன்று குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனைகளை நடத்த பாரத் பயோடெக்கிற்கு ஒப்புதல் அளித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 03:09 PM IST
Covaxin: குழந்தைகளுக்கு செலுத்த விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தகவல் title=

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) மே 11 அன்று குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனைகளை நடத்த பாரத் பயோடெக்கிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜூன் மாத  தொடக்கத்தில்,  12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பரிசோதனைக்காக கோவேக்ஸின் செலுத்தும் நடவடிக்கை தொடங்கியது. 

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு (DCGI) அவசரகால பயன்பாட்டிற்காக குழந்தைகளுக்கான கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வரும் சூழ்நிலையில், பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை வர இன்னும் 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என்பதால், தற்போதுள்ள அவசர தேவையை கருத்தில் கொண்டு, சோதனை நிறைவடைவதற்கு முன்பே, அவசரகால பயன்பாட்டிற்கு அரசு அனுமதி அளிக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கி  சுமார் 56 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

ALSO READ | Covaxin: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று முதல் குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை

குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசியின் பரிசோதனைகளுக்கு இரத்த மாதிரிகளை சேகரித்துக் கொள்வதுடன் கூடவே, 0 முதல் 28 நாட்களுக்கு இடையில் இரண்டு முறை தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, 56 வது நாளில், இரத்த மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது, இதனால் உடலில் எந்த அளவிற்கு ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன என்பது கண்டறியப்படும். 

ALSO READ | Zydus Cadila வழங்கும் ZyCoV-D: கொரோனா 3வது அலையிலிருந்து குழந்தைகளை காக்குமா.!!

இதேபோல், சோதனையின் 118 மற்றும் 210 வது நாளில், ஆன்டிபாடிகளின் அளவை அறிய இரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. இதுவரை சோதனை பற்றி கிடைத்த தகவல்களின்படி, சோதனையின் போது குழந்தைகளுக்கு, இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என கண்டுடறியப்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் வலி போன்ற பக்க விளைவுகள் 10-12 வயதுடைய சில குழந்தைகளில் காணப்பட்டன, இருப்பினும் இந்த அறிகுறிகள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். குழந்தைகளுக்கு தடுப்பூசி (Vaccine for Children) போடுவதில் தற்போது எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

Also Read | இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News