உலக அளவில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கையும் தீவிரமும் குறைந்து வருகிறது. இதையடுத்து, இப்போது உலகின் பெரும்பாலான நாடுகள் சர்வதேச பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வர அனுமதிக்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், கோவிட் தொற்றுநோய் உலகை ஆட்கொண்ட பிறகு, பயணம் தொடர்பான விதிகளிலும் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த விதிகளில் ஒன்று, உங்கள் பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதாகும்.
கோவிட் -19 (COVID-19) வழிகாட்டுதலின் கீழ் பல நாடுகள் இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளன. நீங்களும் வெளிநாடு செல்லும் எண்ணத்தில் இருந்தால், முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்கும் பணிகளை செய்துவிடுங்கள்.
மத்திய அரசு ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான புதிய வழிகாட்டுதல்களில் இதைச் சேர்த்துள்ளது. வெளிநாடு செல்ல, கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை பாஸ்போர்ட்டுடன் இணைப்பது கட்டாயமாகும். நீங்கள் கல்வி அல்லது பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல விரும்பினால், உங்களுக்கும் பாஸ்போர்டுடன் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை இணைப்பது அவசியமாகிறது.
கோவின் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பாஸ்போர்ட்டை கோவிட் -19 தடுப்பூசி (Vaccine) சான்றிதழுடன் இணைக்கலாம். கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான முழுமையான செயல்முறையைப் பற்றி விளக்கமாக இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்கான செயல்முறை:
- முதலில், கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான, cowin.gov.in க்குச் செல்லவும்.
ALSO READ: இனி இந்தியா மட்டுமல்ல, கனடா உள்ளிட்ட 50 நாடுகள் Co-WIN செயலியை பயன்படுத்தும்
- OTP மூலம் லாக் இன் செய்த பிறகு, இங்கே 'Raise an issue' ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும்.
- இதன் பிறகு 'Add Passport details to my vaccination certificate'-ல் கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் பட்டியலில் இருந்து பயணிக்கும் நபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் பெயர் மற்றும் பாஸ்போர்ட் (Passport) எண் போன்ற அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, கீழே உள்ள ஒரு பெட்டியை டிக் செய்ய வேண்டும். அதில் இந்த பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு இருக்கும்.
- அதன் பிறகு நீங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கும் (Submit Request) பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் எண்ணிற்கு ஒரு செய்தி வரும்.
- அடுத்து, கோவின் செயலியில் உங்கள் கணக்கு விவரங்களுக்குச் (Account Details) சென்று, இங்கே சான்றிதழ் (Certificate) பொத்தானைக் கிளிக் செய்து பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் புதிய தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கவும்.
ALSO READ: Post office Extends service: இனி தபால்நிலையத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR