பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்த தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சுத்தகுண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் திருட்டு நடந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  


இந்த நிலையில் அந்த காட்சிகளின் அடிப்படையில் வீட்டில் திருடியதாக ஒரு முதியவரை சுத்தகுண்டே பாளையா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்த ரமேஷ் (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்க நகைகள், ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 


மேலும் படிக்க | திருமாவளவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திமுக உறுப்பினர்கள்!


ரமேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது ரமேசுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3-வதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த 2 மனைவிகள், பிள்ளைகள் சேர்ந்து ரமேசை வீட்டில் இருந்து வெளியேற்றினர். 


பின்னர் தமிழ்நாட்டிற்கு சென்ற ரமேஷ் அங்கு பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை, பணத்தை திருடி உள்ளார்.  திருடிய நகை, பணத்தை சில பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்து உள்ளார். திருட்டு வழக்குகளில் தமிழக போலீசாரால் 4 முறை கைது செய்யப்பட்ட ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். 


பின்னர் அவர் பெங்களூருவுக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைதான ரமேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | சசிகலா சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR