மாணவனுக்கு விஷம் கலந்த குளிர் பானம்; உடன் படிக்கும் மாணவியின் தாய் செய்த கொடூரம்!
காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததால் மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன், மாலதி இவர்களுடைய மகன் பால மணிகண்டன். காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் உள்ள கேட்டிருக்கு வந்துள்ளார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணி எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் இந்த குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியதாக வாட்ச்மேன் தெரிவித்தார்.
அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த பால மணிகண்டனிடம் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை பால மணிகண்டன் குடித்துள்ளான். நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியும் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பாலம் மணிகண்டன் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான். அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பாலியல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் கைது
அதன் பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்து வந்தனர். அந்த நிலையில் பள்ளிக்கு சென்று இதை யார் கொடுத்தது என்று விசாரணை செய்துள்ளனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தார் என்பது ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்ததாகவும் குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே நான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை செய்ததில் பால மணிகண்டன் நன்றாக படிப்பதாகவும், தற்போது நடைபெற்ற பரீட்சையில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது. அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் அம்மா அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அது போல் இதுவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை - மாமியார் தொல்லை ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ