‘அன்புள்ள சத்குருவுக்கு.!’ - சோனியா காந்தி
மண்ணைக் காப்போம் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குருவுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்த சட்டங்களை இயற்றுவதற்காக 'மண் காப்போம்' என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். சத்குரு தற்போது தனது 100 நாள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டுள்ளார். அதாவது, மார்ச் 21-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பயணத்தைப் புறப்பட்டார். பயணத்தை தொடங்கிய முதல் நாளில் முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, பசவண்ணர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். இருசக்கர வாகனம் மூலம் இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக பயணிக்கிறார். கிட்டத்தட்ட 27 நாடுகளுக்குச் சென்று, 30,000 கி.மீ பயணித்து மீண்டும் இந்தியா திரும்ப உள்ளார்.
இந்நிலையில், சத்குருவின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்
இதுதொடர்பாக சத்குருவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘அன்புள்ள சத்குரு, மண் காப்போம் இயக்கத்தை தொடங்கியுள்ள ஈஷாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மண் அழிவை தடுக்க நடக்கும் போரில் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது. நீங்கள் கூறியுள்ளப்படி, அதிகம் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் மண் அழிவு பிரச்சினையானது, உலகின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுற்றுத்தலாக உள்ளது. எனவே, நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த உன்னதமான பணி வெற்றி பெற உங்களுக்கும், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதற்கு நன்றி கூறும் விதமாக, சத்குரு ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். ‘அதில் வெளியிட்டுள்ள பதிவில், “நமஸ்காரம் திருமதி.சோனியா காந்தி அவர்களே. #SaveSoil இயக்கம், மண் அழிவையும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் தடுப்பதற்கு ஒன்றுகூடி செயல்பட உலக நாடுகளை வேண்டுகிறது. உங்கள் ஆதரவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR