Delhi Explosion Latest News Updates: தேசிய தலைநகர் டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கே Bansi Wala மிகப் பிரபலமான பேக்கரி ஒன்றும் இயங்கி வருகிறது. அந்த பேக்கரியின் பக்கம்தான் மர்ம பொருள் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அந்த பேக்கரியின் அருகே பூங்கா ஒன்றும் உள்ளது. அந்தப் பூங்காவையும் பேக்கரியையும் ஒரு தடுப்புச் சுவர் ஒன்று பிரிக்கிறது. இந்த சுவர் அருகேதான் இந்த மர்ம பொருள் வெடித்திருக்கிறது. அந்த பேக்கரியின் அருகே வெள்ளை நிறத்தில் வானுயரத்திற்கு புகை எழும்புவதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது.


கால் செய்தது யார்?


தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்,"தங்களுக்கு காலை 11:48 மணிக்கு அவர்களுக்கு பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாக அழைப்பு ஒன்று வந்தது. உடனே நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தோம்" என தெரிவித்தனர். குண்டுவெடிப்பு தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தது யார் என்பது இன்னும் தெரியவரவில்லை, அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் குழுவினரும் தற்போது வருகை தந்துள்ளனர். 



மேலும் படிக்க | கேரளா ரியல் எஸ்டேட் பெண் புரோக்கர் கொலை... கள்ளக்காதல் ஜோடி சிக்கியது எப்படி?


கடந்த மாதமும் இதேபோல்...


டெல்லியின் இதே பிரசாந்த் விஹார் பகுதியில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று அங்குள்ள சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவரில் ஒரு மர்ம பொருள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த குண்டுவெடிப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின்போது, மர்ம பொருள் வெடித்த சத்தம் சில கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. 


அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம பொருள் வெடித்ததில் பள்ளிச் சுவரின் ஒரு பகுதி சேதமானது. மேலும், சிஆர்பிஎஃப் பள்ளி அருகில் உள்ள கடைகளின் பெயர் பலகைகள், கண்ணாடிகள் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த சில கார்களின் கண்ணாடிகளும் உடைத்தது காட்சிகளை காண முடிந்தது. இது கச்சா வெடிகுண்டு மூலம் வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் முதற்கட்ட விசாரணையில் அங்கும் வெள்ளை நிற தூள் பொன்ற பொருள் காணப்பட்டது.


தற்போது இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் அதே பகுதியில் மற்றொரு மர்ம பொருள் வெடித்தது பொதுமக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | 26/11 தாஜ் ஹோட்டல் தாக்குதல்... உயிர்களை காப்பாற்றி ஹீரோவான மேனேஜர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ