Kerala murder News | கேரள மாநில பெரும்பாவூர் பகுதியை சார்ந்தவர் ஜெய்சி ஏப்ரஹாம். இவர் கடந்த ஒரு வருடமாக களமசேரி பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார். ஜெய்சி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனிடையே இந்த மாதம் 17ஆம் தேதி கனடாவில் இருக்கும் மகள், தாய் ஜெய்சியை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த மகள் இதுகுறித்து களமசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே, அப்பார்ட்மெண்டுக்கு சென்று போலீசார் பார்த்தபோது, குளியலறையில் தலையில் பலத்த காயங்களுடன் ஜெய்சி இறந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடல்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் ஜெய்சி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெய்சி கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இந்த கொலையில் தொடர்பு இருக்கும் என கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெய்சியின் நண்பரான திற்காக்கரா பகுதியை சார்ந்த கிரிஷ்பாபு என்பதும், மற்றொருவர் ஜெய்சி தங்கி வந்த அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் கதீஜா என்பதும் தெரியவந்தது.
ஐடியில் பணிபுரியும் கிரிஷ் பாபு ஜெய்சியின் நண்பராக இருந்துள்ளார். மொபைல் போன் ஆப்புகள் மூலமாகவும், கிரெடிட் கார்ட் மூலமாகவும் இவருக்கு ஏராளமான கடன் இருந்து வந்துள்ளது. கிரிஷ்பாபு ஜெய்சியை பார்க்க அவ்வப்போது அப்பார்ட்மெண்டுக்கு வரும்போது தான் கதீஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு கள்ளக்காதலாக மாறி உள்ளது. ஜெய்சி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாலும், ஏராளமான நகைகளும் உள்ளதாலும் அனைத்தையும் அப்பார்ட்மெண்டில் வைத்திருப்பார். அவரை கொலை செய்து பணத்தையும், நகைகளையும் திருடி மாட்டிக்கொள்ளாமல் சுகபோகமாக வாழலாம் என இருவரும் நினைத்துள்ளனர். அதன்படி மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்யலாம் என கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிட்டு இரு முறை ட்ரையலும் செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 17ஆம் தேதி திற்காக்கரா - பகுதியில் இருந்து களமசேரி பகுதிக்கு வருவதற்குள் ஹெல்மெட் அணிந்து இரண்டு பைக்குகள் உட்பட இரண்டு ஆட்டோக்களில் பயணித்து சிசிடிவியில் முகம் சிக்காதபடி அப்பார்ட்மெண்டில் வந்து ஜெய்ஸியின் ரூமுக்குள் நுழைந்துள்ளார் கிரிஷ் பா. பின்பு பேக்கில் மறைத்து வைத்திருந்த தம்பிள் மற்றும் ஷாலை கொண்டு ஜெய்சியை தாக்கியுள்ளார். அவர் இறந்த பின்பு குளியல் அறைக்குள் கொண்டு சென்று தவறி விழுந்து இறந்ததாக சித்தரித்துள்ளார்.
பின்பு ரத்தக்கறை உள்ள சட்டையை மாற்றி பேக்குக்குள் வைத்திருந்த புது சட்டையை போட்டுவிட்டு, வீட்டுக்குள் பணம், நகை இருப்பதை தேடி உள்ளார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. ஜெய்சி அணிந்திருந்த இரு தங்க வளையல்களை மட்டும் எடுத்து சென்றுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இறப்பின் போது போலீசார் விசாரணையில் எதுவும் தெரியாதது போல் நாடகமாடி வந்துள்ளார் கிரிஷ் பாபு. கிடைத்த சிசிடிவி காட்சிகளிலும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் சிக்கவில்லை. அப்பார்ட்மெண்டில் உள்ள சிசிடிவியில் தலைக்கவசத்துடன் ஒருவர் அப்பார்ட்மெண்டில் வருவதும் -திரும்பி போகும்போது மற்றொரு கலர் சட்டை அணிந்து இருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இருவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரித்ததில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியே வந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | 26/11 தாஜ் ஹோட்டல் தாக்குதல்... உயிர்களை காப்பாற்றி ஹீரோவான மேனேஜர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ