Delhi Explosion Near CRPF School: டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே இன்று காலை மிகவும் சத்தமாக மர்ம பொருள் ஒன்று வெடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பள்ளியின் சுவர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அங்கு நடந்த வெடிப்பு சம்பவத்தை என்ன என ஆய்வு செய்த வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் எடுத்த வீடியோவில் பெரும் புகை வானுயரம் எழுவதை காண முடிகிறது. புகை அங்கு மேகமூட்டம் போல் காட்சியளிக்கிறது. மேலும், போலீசார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். நேரடி சாட்சி ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில்,"நான் வீட்டில் இருந்தேன். பயங்கர சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது ஒரே புகை மண்டலமாக இருந்தது. உடனே அதை வீடியோ எடுத்தேன். வேறு ஏதும் எனக்கு தெரியாது. அங்கு போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் உடனே வந்தன" என்றார்.
பாதாளச் சாக்கடையிலும் தேடல்
பிரஷாத் விஹார் பகுதியில் அருகே இருக்கும் சிஆர்பிஎஃப் பள்ளியின் அருகே இன்று காலை 7.47 மணிக்கு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அமித் கோயல் கூறுகையில்,"இந்த வெடிப்பு சம்பவத்திற்கு எது வழிவகுத்தது என்பதை அறிய நிபுணர்கள் அடங்கிய குழுவை சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளோம். அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள்.
#WATCH | Rohini, Delhi: Search operation by investigative and security agencies continues outside CRPF School in Prashant Vihar. pic.twitter.com/0IV7EGqauk
— ANI (@ANI) October 20, 2024
மேலும் படிக்க | விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா! முகேஷ் அம்பானியின் முக்கிய முடிவு!
இருப்பினும், போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொருள்களும் கிடைக்கவில்லை. விசாரணையின் ஒரு பகுதியாக பாதாளச்சாக்கடையையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த வெடிப்பு சம்பவத்தினால் பள்ளியின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும், அங்கிருந்த கடைகளின் பெயர் பலகைகள் சேதமடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
போலீசார் கூறுவது என்ன?
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்று காலை 7.47 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் மிகுந்த சத்தத்துடன் சிஆர்பிஎஃப் பள்ளி செக்டார் 14 ரோஹினி பகுதியில் ஒரு மர்ம பொருள் வெடித்ததாக அவர் கூறினார். போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் பள்ளியின் சுவர் முற்றிலும் சேதம் அடைந்தது. அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. அருகில் இருந்த கடைகள் மற்றும் கார்கள் சேதம் அடைந்திருப்பதையும் காண முடிந்தது. ஆனால் இதனால் யாரும் காயமடையவில்லை. குற்ற விசாரணை குழுவினர், தடயவியல் குழுவினர், தீயணைப்பு குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்ற சம்பவம் இடம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்களின் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. குண்டுவெடிப்பின் பின்னணியில் கச்சா வெடிகுண்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஒரு குவாட்டரின் விலை ரூ.99... சொன்னதை செய்யும் மாநில அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ