பீதியைக் கிளப்பும் டெங்கு காய்ச்சல்: உயிர் பலி 15-ஐ எட்டியது
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் குறித்த குடிமை அமைப்பின் அறிக்கையின்படி, இந்த பருவத்தில் டிசம்பர் 4 வரை மொத்தம் 8,975 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி: டெங்கு நோயின் ஆவர்த்தனம் தொடங்கிவிட்டது. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் டெங்குவால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தேசிய தலைநகரில் டெங்குவால் மேலும் 6 பேர் இறந்துள்ள நிலையில், இந்த ஆண்டு டெல்லியில் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
திங்களன்று நகராட்சி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, டெங்கு (Dengue) பாதிப்பு எண்ணிக்கை 8,900 ஆக உயர்ந்துள்ளது.
நவம்பர் 29 வரை, தெற்கு தில்லி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ டெங்கு இறப்பு எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இந்த ஒன்பது பேரில் ஒரு மூன்று வயது சிறுமி மற்றும் மைனர் ஒருவரும் அடங்குவர்.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் குறித்த குடிமை அமைப்பின் அறிக்கையின்படி, இந்த பருவத்தில் டிசம்பர் 4 வரை மொத்தம் 8,975 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ALSO READ:Omicron: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு
முந்தைய ஆண்டுகளில், டெங்கு பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை
2016 - 4,431
2017 - 4,726
2018 - 2,798
2019 - 2,036 மற்றும்
2020 - 1,072
என்று அறிக்கை கூறுகிறது.
2015 ஆம் ஆண்டில், டெல்லியில் டெங்குவால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அக்டோபர்ர் மாதத்திலேயே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,600 ஐத் தாண்டியது, இது 1996 க்குப் பிறகு தேசிய தலைநகரில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பாக இருந்தது.
இந்த ஆண்டு டெங்கு இறப்பு எண்ணிக்கை தேசிய தலைநகரில் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகான மிக அதிக எண்ணிக்கையாகும். 2016 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை 10 ஆக இருந்தது. தேசிய தலைநகர் டெல்லியில் (Delhi) 2019 இல் டெங்கு காரணமாக இரண்டு பேரும், 2018 இல் நான்கு பேரும், 2017 மற்றும் 2016 இல் 10 பேரும் இறந்தனர்.
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விரைந்தது உயர்மட்ட குழு
ALSO READ:மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது!