Dengue Fever: நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு என்பது ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் பரவும் வைரஸ் ஆகும். டெங்கு காய்ச்சல் வந்தால், சிறிதளவு கவனக்குறைவும் ஆபத்தாக முடியலாம்.
டெங்கு (Dengue) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும், இதிலிருந்து கவனமாக இருக்க நினைப்பவர்களும் இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
முதலில் டெங்குவின் அறிகுறிகள் என்னவென்று காணலாம்
- டெங்குவில் பெரும்பாலும் அதிக காய்ச்சல் (Fever) காணப்படுகிறது.
- தலைவலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகிய அறிகுறிகளும் இருக்கும்.
- டெங்குவின் மோசமான விளைவு பிளேட்லெட்டுகளில் ஏற்படுகிறது.
- பிளேட்லெட்டுகளின் வீழ்ச்சி இறப்பு வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இவற்றை உட்கொண்டால் விரைவில் குணமடையலாம்
பப்பாளி சாறு பலன் தரும்
டெங்கு காய்ச்சலில் பப்பாளி சாறு உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வைட்டமின்-சி உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது குறைந்த பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது. டெங்கு நோயாளிகள் பப்பாளி சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடிக்க வேண்டும்.
ALSO READ: Health Alert! அச்சுறுத்தலை அதிகரிக்கும் கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்
மஞ்சள் போட்ட பால் மற்றும் நெல்லிச்சாறும் நல்ல பலன்களை அளிக்கும்:
மஞ்சள் (Turmeric) கலந்த பால் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பாலில் மஞ்சள் தூள் சேர்த்து உட்கொண்டால், காய்ச்சல் குணமாகும். அத்துடன் நெல்லிச்சாறு உடலுக்கு வைட்டமின்-ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொடுக்கிறது. இதன் காரணமாக உங்கள் பிளேட்லெட்டுகள் வேகமாக அதிகரிக்கும்.
இந்த விஷயங்களை தவிர்க்கவும்
1- டெங்கு காய்ச்சல் உள்ள போது எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
2- காபி மற்றும் காரமான உணவை தவிர்க்கவும்
3- அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
4- குளிர்ந்த பொருட்களையும் சாப்பிட வேண்டாம்.
ALSO READ:Weight Loss: எடை இழப்புக்கு சூப் குடிப்பவர்கள், இவற்றை செய்ய வேண்டாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR