அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விரைந்தது உயர்மட்ட குழு

டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிக டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 11:09 AM IST
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விரைந்தது உயர்மட்ட குழு title=

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும் அது சார்ந்த செயல்முறைகளை நிர்வகிக்கவும் பொது சுகாதார நடவடிக்கைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ,  இந்திய அரசு புதன்கிழமை உயர்மட்டக் குழுக்களை டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. 

இந்த குழுக்கள் மாநிலங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கும்.

ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு (Tamil Nadu), உத்தர பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை உதவிக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

நடப்பு ஆண்டில் மொத்தம் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் பற்றி புகாரளித்துள்ளன. நாட்டில் அக்டோபர் 31 வரை ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்புகளில் இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் 86 சதவிகித பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: எதை சாப்பிடவே கூடாது? எதை சாப்பிட வேண்டும்? 

நிபுணர் குழுக்களில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தேசிய வெக்டார் மூலம் பரவும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் அதிகாரிகள் உள்ளனர்.

"டெங்கு (Dengue) பரவலைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கி மாநில அரசுகளுக்கு உதவ அடையாளம் காணப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுக்களை நியமிக்க இதற்கான அதிகாரிகள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்" என்று முதன்மைச் செயலர்கள் (சுகாதாரம்) மற்றும் ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார சேவைகளின் பொது இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் (Delhi) கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிக டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் இதுவரை தேசிய தலைநகரில் 1,530 க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அக்டோபரில் மட்டும் கிட்டத்தட்ட 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: டெங்கு, மலேரியா, கோவிட், பாம்புக்கடி அனைத்திலும் தப்பித்து எமனுக்கே சவால் விடும் இந்தியர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News