மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது!

மஹாராஷ்டிராவில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 07:33 PM IST
மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது! title=

மஹாராஷ்ட்ரா :மஹாராஷ்டிராவில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.  உலகையே ஆட்டிப்படைத்து வந்த கொரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

ALSO READ Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்

அயல்நாடுகளில் மட்டும் இந்த தொற்று காணப்பட்ட நிலையில் இந்தியாவிற்குள்ளும் இந்த வைரஸ் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதன் பரவலை தடுக்க முயற்சி மேற்கொள்ளும் நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் இந்த வைரஸ் பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  குஜராத்தில் 72 வயது நபருக்கும், டெல்லியில் 33 வயது நபர் ஒருவருக்கும், கர்நாடகாவில் 44 மற்றும் 66 வயதான இருவருக்கும் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

omigran

அதனை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு  ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  இந்நிலையில் மேலும் மஹாராஷ்டிராவில் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மொத்தமாக 8 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.

ALSO READ இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News