மும்பை: மகாராஷ்டிராவில் (Maharashtra)  இன்று (சனிக்கிழமை) காலை ஒரு பெரிய அரசியல் சம்பவம் நடந்துள்ளது. சிவசேனா (Shiv Sena) - என்.சி.பி. (Nationalist Congress Party) மற்றும் காங்கிரஸ் (Congress)  இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தோல்வியுற்றதால், சனிக்கிழமை காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை என்.சி.பியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், என்.சி.பி. கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



முதல்வராக பதவியேற்ற பின்னர், தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மக்கள் தெளிவான ஆணையை வழங்கியதாக கூறினார். மகாராஷ்டிராவில் நிரந்தர அரசாங்கம் தேவை. இதற்காக, நாங்கள் என்.சி.பியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம். சிவசேனா கட்சியால் தான் மாநிலதித்ல் ஜனாதிபதி ஆட்சியில் வந்தது. சிவசேனா தங்கள் வாக்குறுதிகளை நிராகரித்தார். இதனால் அரசாங்கத்தை அமைப்பதற்காக ஆளுனரை சந்திக்க நாங்கள் உரிமை கோரியுள்ளோம். மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை நடத்துவோம் எனக் கூறியுள்ளார்.



அதே நேரத்தில், துணை முதல்வரான என்.சி.பியின் அஜித் பவார் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதல் இன்றுவரை எந்த கட்சியும் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்று கூறினார். மகாராஷ்டிரா உழவர் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டது, எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தோம். அதனால் பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளோம் எனக் கூறினார்.