லண்டன்: இந்தியாவுக்கான தீபாவளி பரிசாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவூதி அரேபியா (Saudi Arabia) நீக்கியுள்ளது. நவம்பர் 21-22 தேதிகளில் G-20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த அரசாணையை நினைவுகூரும் வகையில் சவுதி அரேபியா 20 ரியால் பணத்தாள், அதாவது ரூபாய் நோட்டை வெளியிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தாளில் உள்ள உலக வரைபடத்தில் முன்னர் கில்கிட்-பால்டிஸ்தான் (Gilgit-Baltistan) மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பாகிஸ்தானின் பகுதிகளாகக் காட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை பின்னர் அகற்றப்பட்டு விட்டன.


சவுதி அரேபியாவின் நடவடிக்கை பாகிஸ்தானை (Pakistan) இழிவுபடுத்தும் முயற்சி என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. சௌதி அரெபியா ஒரு புதிய கூட்டணியை நோக்கி நகர்கிறது என்பதையும் இது காட்டுகிறது.


இதை உறுதிசெய்து, ஒரு PoK ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவூதி அரபு நீக்கியது!!!!." என்று எழுதியுள்ளார்.


"இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு - கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சௌதி அரேபியா நீக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட ஒரு படத்தையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ: குஜராத்தையும் வளைத்து மேப் போட்ட பாகிஸ்தான்: அபத்த அரசியல் என இந்தியா பதிலடி


இந்திய அரசு இதற்கு முன்னர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, கில்கிட் பால்டிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது.


வெளியுறவு அமைச்சகம் (MEA), "இந்திய அரசு பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்ததுடன், கில்கிட்-பால்டிஸ்தான் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை மீண்டும் வலியுறுத்தியது” என்று கூறியது.


நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான அறிக்கைகளை தாங்கள் கண்டதாகவும், அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் MEA செப்டம்பர் மாதம் கூறியிருந்தது.


இம்ரான் கான் அரசாங்கம் முன்னர் பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. குஜராத்தில் உள்ள ஜுனாகத், சர் க்ரீக் மற்றும் மானவதார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் சில பகுதிகள் ஆகியவை பாகிஸ்தானின் பகுதிகள் என அதில் கோரப்பட்டிருந்து.


நரேந்திர மோடி அரசாங்கத்தின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவின் முதல் ஆண்டு நிறைவுக்குப் பின்னர் இந்த வரைபடம் வெளி வந்தது.


ALSO READ: Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR