DK Shivakumar Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டி.கே. சிவக்குமாருக்கு எதிரான மனு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு:
டி.கே. சிவக்குமார் எதிராக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அதற்கு இடைக்கால உத்தரவை வழங்க மறுத்தது. மேலும், தடை உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி, அடுத்த விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தது. இதன் மூலம் டி.கே.சிவகுமாருக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளதாக தெரிகிறது.
ஏன் சிபிஐ விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது:
டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்ற விடுமுறை முடிவடைய உள்ளதால், இந்த வழக்கையை அங்கேயே விசாரிப்பதே சரியானது என கருத்து தெரிவித்துள்ளது.
ஏன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது:
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (மே 17, புதன்கிழமை) சிபிஐ மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. டி.கே.சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கு மே 23 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
டி.கே.சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை:
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி, டி.கே.சிவக்குமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தடை உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்டது. 2017ல் டி.கே.சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் விசாரணையை தொடங்கியது மற்றும் விசாரணைக்குப் பிறகு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ மாநில அரசிடம் கோரியிருந்தது.
டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யக் காரணம் என்ன:
2019 செப்டம்பரில் சிபிஐ அனுமதி பெற்றது. அக்டோபர் 3, 2020 அன்று, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கு மற்றும் விசாரணையை கேள்விக்குட்படுத்தி டி.கே.சிவக்குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். 2020 ஆம் ஆண்டிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், தற்போது தனக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்புவதன் மூலம், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முயற்சி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், விசாரணைக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
நீதிமன்றத்தின் கோடை விடுமுறை:
சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிவடைவதால், அங்கு விசாரணை நடத்துவதுதான் சரியானது என்று கருத்து தெரிவித்தது.
வருமான வரிச் சோதனையில் சுமார் ரூ.41 லட்சம் சிக்கியது:
ஆகஸ்ட் 2017 இல், வருமான வரித்துறை அதிகாரிகள் புது தில்லி மற்றும் டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான பிற இடங்களில் சோதனை நடத்தியதில், ஆவணமற்ற ரொக்கம் சுமார் ரூ.41 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளின் கீழ், சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ