Kannada News In Tamil: நேற்று (மே 14, ஞாயிற்றுக்கிழமை) மாலை நடந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டத்தில், 'கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு நடந்த கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் கிட்டத்தட்ட சுமார் 2 மணி நேரம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதனையடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் அமோக வெற்றி:
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் 135 இடங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றது, அதே நேரத்தில் ஆளும் பாஜக 66 இடங்களையும், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 19 இடங்களையும் கைப்பற்றியது.
அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு?
காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மேலும் இரு தலைவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர் தான் அடுத்த முதல்வர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கே வசம்:
இந்தநிலையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டம் நடைபெறும் முன்னதாக, முதல்வர் வேட்பாளர்களாகக் கருதப்படும் கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோருடன் தனித்தனியாக காங்கிரஸ் மத்திய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் சிஎல்பி கூட்டத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் மூவரும் 2 மணி நேரத்துக்கு மேல் கருத்து கேட்டனர். இறுதியில் கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு வழங்கி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த முதல்வர் குறித்து எம்எல்ஏக்கள் தெவித்த கருத்தை அறிக்யாக தயாரித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மேலிட பார்வையாளர்கள அனுப்ப உள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் வர் யார் என்பதை மல்லிகார்ஜூன் கார்கே இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க - முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு...? ஆனால் சிவகுமாருக்கும் நல்ல செய்தி இருக்கு!
சித்தராமை vs டி.கே. சிவகுமார்
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது வெற்றி பெற டி.கே.சிவகுமாரின் பணி முக்கியமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்று வெற்றி பெற டி.கே.சிவகுமாரின் தேவை மிக முக்கியமாக இருக்கிறது என்று மேலிட தலைவர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே மாநில தலைவர் பதவியில் டி.கே. சிவகுமார் உள்ளார். எனவே முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா டெல்லி பயணம்:
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை கார்கே தேர்வு செய்ய உள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா இன்று (மே 15, திங்கள்கிழமை) டெல்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ