Prashant Kishor Fees For One Party: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து, அதற்கேற்ப பிரச்சாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்து கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. அமெரிக்க தேர்தலிலும் இவை பெரிய பங்கு வகிக்கும். அது இந்திய தேர்தல் களத்திலும் கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது. அதில், அரசியல் வியூக வகுப்பாளர்களில் இந்தியாவில் அதிகம் அறியப்பட்டவர் எனில் பிரசாந்த் கிஷார்தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றபோது பிரசாந்த் கிஷோரின் (Prashant Kishor) அப்போதைய I-PAC நிறுவனம்தான் வியூகம் வகுத்து கொடுத்தது. அப்போதுதான் பிரசாந்த் கிஷார் நன்கு வெளிச்சத்திற்கு வந்தார் எனலாம். அப்போது இருந்து இந்திய அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டில் இவரின் அமைத்த கொடுத்த வியூகத்துடன் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலினும் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பின்னர், 2021 மே மாதமே அவர் I-PAC நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.


பிரசாந்த் கிஷோரின் அரசியல் கட்சி


தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மே மாதம் அவர் ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை உருவாக்கினார். தற்போது அது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜன் சுராஜ் கட்சி வரும் 2025ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த கட்சிக்கு முதல் தேர்தலாக அமைந்துள்ளது. பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தாராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் நவ. 13ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவ.23ஆம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | திடீரென வெடித்த வெங்காய குண்டு... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்


இந்நிலையில், பெலகஞ்ச் தொகுதியில் ஜன சுராஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த அக். 31ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஒரு தேர்தலில் கட்சிக்கு வியூகம் வகுத்து கொடுக்க தான் வசூலிக்கும் கட்டணம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது, அவரது கட்சி பிரச்சாரத்திற்கு எப்படி, எங்கு இருந்து நிதி கிடைக்கிறது என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரசாந்த் கிஷோர் பேசியிருந்தார். 


ரூ.100 கோடிக்கும் மேல்...


அப்போது பேசிய அவர்,"நான் வகுத்து கொடுத்த வியூகத்தின்படி தற்போது வெவ்வேறு மாநிலங்களில் 10 அரசாங்கங்கள் ஆட்சி செய்து வருகின்றன. அப்படியிருக்க, தேர்தல் பிரச்சாரத்திற்காக பந்தல் போட்டு, போஸ்டர் ஓட்டுவதற்கு கூடவா என்னிடம் பணம் இருக்காது...? அவ்வளவு பலவீனமானவன் என என்னை நினைத்தீர்களா...? பீகாரில் நான் வசூலிக்கும் கட்டணத்தை யாரும் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஒரே ஒரு தேர்தலில் ஒரு கட்சிக்கு நான் வியூகம் வகுத்து கொடுக்க, ரூ.100 கோடி முதல் அதற்கும் மேலே அவர்களிடம் இருந்து வசூல் செய்வேன். நான் அடுத்து ஒரு அட்வைஸ் கொடுத்தாலே, சுமார் 2 ஆண்டுகளுக்கு எனது கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கான நிதியை என்னால் திரட்டிவிட முடியும்" என்றார். தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க ஒரு கட்சியிடம் ரூ.100 கோடி முதல் அதற்கும் மேல் தான் வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் பொதுவெளியில் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 


மேலும் படிக்க | தீபாவளி முடிந்த நிலையில் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ