புதுடெல்லி: பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் தாக்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பஞ்சாபில் உள்ள ரவுடிகளையும் சிறைகளில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளையும் ஐ.எஸ்.ஐ அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து தலைவர்களைக் கொன்று குவிக்க சதி  
ஐ.எஸ்.ஐ கடந்த சில நாட்களில் பஞ்சாபில் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி கூறுகிறார். பஞ்சாபில் வசிக்கும் இரண்டு குண்டர்களையும், அந்த மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளையும் அணுகி, இந்து அமைப்புடன் தொடர்புடைய சில தலைவர்களைக் கொல்லும் பணியை அவர்களுக்கு வழங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ என்ற செய்தி வெளியாகியுள்ளது..


பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்த தகவல்கள்  
பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளின்  உதவியுடன், ஐ.எஸ்.ஐ., ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்களை சப்ளை செய்கிறது. கடந்த சில மாதங்களில், ட்ரோன்கள் மூலமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பல கும்பல்களையும் பயங்கரவாதிகளையும் பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) தடுத்து வைத்துள்ளன.


Also Read | நடுக்கடலில் நின்று அடம் பிடிக்கும் சீனா: கடுப்பாகி கண்டிக்கும் ஜப்பான்


இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு  
பாகிஸ்தான் தற்போது 'காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி' (Kashmir Khalistan Referendum Front) என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களையும் காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்களை அந்தந்த நாடுகளில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷன் மற்றும் தூதரகங்கள் மூலம் இணைத்து குழுக்களில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.  
கே -2வுக்கு திட்டமிடும் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகள் 
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக உள்ளது.


தற்காக, பல சுற்று கூட்டங்களை யும் ஐ.எஸ்.ஐ நடத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் திட்டங்களை முறியடிக்கவும், தங்கள் சதித்திட்டத்தை செயல்படுத்தவும் மும்முரமாக முயல்கிறது ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் முயல்கிறது. 


இந்த நிலையில், பஞ்சாபில் பயங்கரவாத கூட்டு எதிர் நடவடிக்கை மையம் (Joint Counter Operation Center) ஒன்றை அமைக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. என்.ஐ.ஏ (NIA), ரா (RAW), ஐபி (IB), பஞ்சாப் போலீஸ் (Punjab Police) மற்றும் எதிர் பயங்கரவாத குழு (Counter Terror Team) ஆகியவை இந்த மையத்தில் சேர்க்கப்படும்.


கடந்த  சில மாதங்களில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் உதவியுடன், பஞ்சாப் மாநில இளைஞர்களை பயங்கரவாத குழுக்களில் சேர்க்க ஐ.எஸ்.ஐ., சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. பஞ்சாபின் பதான்கோட்டில் என்.எஸ்.ஜி பிளாக் கேட் கமாண்டோக்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. NSG இன் SAG-51 பிரிவானது, பயங்கரவாதிகளை கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குழுவை உருவாக்கி நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கடுமையாக எதிர்கொள்ளும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது.


Read Also | 2041இல் தான் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வருமா? அதிர்ச்சி தகவல்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR