Politics: பிரபல நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணைந்ததன் பின்னணி என்ன?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தி, பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார். அதிரடி நடிப்புக்காக அறியப்பட்ட விஜயசாந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தி, பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார். அதிரடி நடிப்புக்காக அறியப்பட்ட விஜயசாந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜயசாந்தி தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் (Government) நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். அதோடு, வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். திரைத்துறைக்குள் அவர் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
1998-ம் ஆண்டு பா.ஜ.கவில் (BJP)இணைந்து, மகளிர் அணிச் செயலாளராக இருந்த அவர், சில காலத்தில் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கினார். போதுமான வரவேற்பு இல்லாததால் 2009=ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த விஜயசாந்தி (vijayashanthi), அதிலிருந்தும் விலகிவிட்டார். தற்போது மீண்டும் தனது தாய்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார்.
Also Read | Rajini as a Politician: அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நுழையும் சூப்பர் ஸ்டார்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று விஜயசாந்தி சந்தித்ததில் இருந்தே விஜயசாந்தி பா.ஜ.கவில் இணைவார் என்று வதந்திகள் உலாவின. 2023-ல் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜயசாந்தி பாஜகவில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தான் காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நிலையில், விஜயசாந்தியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். அதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஜனவரி மாதம் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளார். தமிழக அரசியல் தற்போது திரை நட்சத்திரங்களின் வரவால் சூடுபிடித்து வருகிறது.
அதிலும், தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளாக திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது அதிரடிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
Also Read | KGF 2: Yash-இன் teaser இந்த தேதியில் வெளியாகுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR