வாரணாசியில் கங்கை கரையில் உள்ள 88 படித்துறைகளில் மணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகளை ஒட்டியுள்ள மயானங்கள் மிகவும் பிரபலம். இங்கே தகனம் செய்தால் மறு பிறவி இருக்காது என்ற நம்பிக்கை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு சடலங்கள் கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிகர்னிகா, அரிச்சந்திரா படித்துறைகளில் 365 நாட்களும், 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். இந்த மயானங்களில் வாழும், 800க்கும் மேற்பட்ட டோம் இன குழுக்களுக்கு  தலைவர் தான் டோம் ராஜா. 


ராஜா ஹரிஷ்சந்திரனின் காலத்திலிருந்தே டோம் சமூகத்திற்கு பிணங்களை எரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.


டோம் ராஜா என்பவர்,  பிணங்களை எரிக்கும் இந்த சமூகத்திற்கு தலைவராக உள்ளார். 


டோம் ராஜாவாக இருந்த, ஜெகதீஷ் சவுத்ரி, நீண்டகால உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.


சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தனர்.


"வாரணாசியின் டோம் ராஜா ஜெகதீஷ் சவுத்ரி ஜியின் மரணத்தால் நான் வருத்தப்படுகிறேன். அவர் வாரணாசியின் கலாச்சாரம் மற்றும் சனாதன் தர்மத்தின் மரபுகளை பராமரிப்பவராக இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் சமூகத்தின் நலனுக்காக பணியாற்றினார். அவரது ஆன்மா கடவுளிண் நிழலில் ஓய்வெடுக்கப்பட்டும் ஓய்வெடுக்கட்டும். அவரது பிரிவால வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ”என்று பிரதமர் அமைச்சர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது


டோம் ராஜா தான், பிரதமர் நரேந்திர மோடியின் வேட்புமனுவை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


யோகி ஆதித்யநாத் அவரது மறைவு "ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் ஒரு இழப்பு" என்றார்.


"டோம் ராஜா ஜெகதீஷ் சவுத்ரியின் மரணம் வருத்தமளிக்கிறது. அவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் ஒரு இழப்பு.  பாபா விஸ்வநாத் காலடியில் அவர் இடம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். ஓம் சாந்தி," என யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயிலில் இனி பக்தர்கள் தரிசிக்கலாம்: நேரம், புதிய விதிகள் இதோ!!