டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2010 முதல் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலகம் முழுவதும் இந்த நாள் மாணவர்கள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 90 வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாள் ஏன் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்வெளி விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், டாக்டர் கலாம் (Dr. Abdul Kalam) அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர் ஆவார். அவர் இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக, மிகவும் மாறுபட்ட குடியரசுத் தலைவராக இருந்தார்.


கலாம் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்தார். மேலும் அவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாக குறிப்பிடப்படுகிறார்.


அவர் மக்கள் தலைவர் என்று பிரபலமாக குறிப்பிடப்பட்டார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியைக் கவுரவிப்பதற்காக அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐநா (UN) அறிவித்தது. ஆசிரியர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்கள் என்றும், மாணவர்கள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்றும் நம்பிய ஒரு சிறந்த ஆசிரியர் அவர்.


ALSO READ: ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து


தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் ஒரு முன்மாதிரியான நபராக இருந்தார். அவர் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் எப்போதும் திகழ்வார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர், மாணவர்களிடம் எப்போதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு உன்னத தலைவர். அவரது இந்த பண்புகளுக்காக அவரது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கற்பித்தல் அவரது இதயத்திற்கு நெருக்கமான பணியாக இருந்தது. அவர் அதை மிகவும் விரும்பினார். அவர் ஒரு ஆசிரியராக நினைவுகூரப்பட விரும்பினார். ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையில் சொற்பொழிவு ஆற்றும் போதுதான் டாக்டர் கலாம் இறுதி மூச்சு விட்டார். அவர் தனது வாழ்வின் 40 ஆண்டுகளை ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் நிர்வாகியாகவும் முக்கியமாக டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் இஸ்ரோ (ISRO) (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தார். அந்த ஆண்டுகளில், டாக்டர் கலாம் இந்தியாவின் சிவில் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டார்.


பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வாகனத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் அவரது அற்புதமான பணிகளுக்காக அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்பட்டார்.


டாக்டர் கலாம் 1998 இல் இந்தியாவின் பொக்ரான்- II அணு சோதனைகளில் ஒரு முக்கியமான நிறுவன, தொழில்நுட்ப மற்றும் அரசியல் பங்கை வகித்தார். அவருக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, வீர் சாவர்க்கர் விருது மற்றும் ராமானுஜன் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.


அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில், அக்னி சிறகுகள், இந்தியா 2020, இக்னைடட் ஸ்பிரிட் மற்றும் டிரான்சென்டென்ஸ்: பிரமுக் ஸ்வாமிஜியுடனான எனது ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில சிறந்த புத்தகங்களாகும்.


அவரது எழுத்துக்கள் மற்றும் வாழ்க்கையின் போதனைகளால் பலர் ஊக்கம் பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR