தில்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, ஆறாவது முறையாக, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதுவரை ஐந்து முறை சம்மன் அனுப்பிய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவாகவில்லை. எனவே வரும் 19ஆம் தேதி அன்று, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கு அனுப்பிய சம்மன் விரோதமானது என்றும் அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சம்மன்கள் அனுப்பப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி, ஜனவரி 18ம் தேதி, பிப்ரவரி 2ம் தேதி ஆகிய தேதிகளில், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்கள் அனுப்பப்பட்டது. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில், அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்து சம்மன்கள் அனுப்பியது.


டெல்லியில் ஆம் ஆர்மி கட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில், கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், புதிய மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், புதிய மதுபான கொள்கை விவகாரத்தில், பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை எடுத்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இதை எழுத்து சட்டவிரோதமான பரிமாற்றம் நடைபெற்றது அம்பலமாகியதை எடுத்து அமலாக்க துறையும் தனது விசாரணையை துவக்கியது. இதில் பல அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் உட்பட, சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மனிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டார்.


மேலும் படிக்க | தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரவிந்த் கேஜ்ரிவால் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை ஐந்து முறை சம்மான் அனுப்பிய பின்னும் அவர் ஆஜராகவில்லை. எப்போதும் போல் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி விசாரணையை தொடர்ந்து கணித்து வருகிறார். இதை அடுத்து இவர் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் இந்த முறை, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால், அவருக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.


முன்னதாக ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமன் சோழன், நில சுரங்க முறைகேடு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே சம்மனை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். பின்னர் சமீபத்தில் அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் முதலமைச்சர் இடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது. ஹேமந்த் சோரனை போலவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தை மதிக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, நீதித்துறையை மதிப்பதில்லை என்றும், சட்ட ஒழுங்கு எதிராக செயல்படுகிறது என்றும் பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்துள்ளது.


மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு: புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ