பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ், மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் ரூபாய் கூடுதல் நிதியை வழங்க மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில், விவசாயிகளின் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ரூபாய் போடப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chauhan), மாநில அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னர் அமைச்சர்கள் அனைவருடனும் உரையாற்றியபோது, ​​பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவில் (PMKSNY), மாநிலத்தின் 77 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, இதன் மூலம் ஒரு விவசாயிக்கு மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.


இப்போது, ​​மத்தியப் பிரதேசம் விவசாயிகளின் நலனுக்காக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்கு மாநில அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் இரண்டாயிரம் ரூபாய் அதாவது மொத்தம் ஆண்டுக்கு நான்காயிரம் ரூபாய் கௌரவ நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மேலும் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் மொத்த தொகை இப்போது 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.


ALSO READ: PM Kisan Yojana: விரைவில் 7வது தவணை!! கண்டிப்பா இதை செய்யுங்கள், ரூ. 2000 கிடைக்கும்


முதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனா மாநில விவசாயிகள் அனைவருக்கும் பயனளிக்கும். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் பலனை மாநிலத்தின் 77 லட்சம் விவசாயிகள் பெறுகின்றனர் என்று முதல்வர் கூறினார்.


விவசாயிகளின் கணக்கெடுப்பின் மூலம், மத்திய பிரதேச அரசு, முதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பலன்களை மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கும். மாநிலத்தில் வங்கி கணக்கு உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியாகும்.


முதல்வர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் பண்டித் தீன்தயாள் உபாத்யாயின் பிறந்த நாளில் சம்மான் நிதியின் முதல் தவணை தொடங்கப்படும் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.


விவசாயிகளுக்கு பயிர் கடன்களை பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதத்தில் (Zero Percent Interest Rate) வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.


முதலமைச்சர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பற்றிய தகவல்கள் கிசான் சம்மான் நிதி போர்ட்டலில் பதிவு செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெய்ன்ஸ் தெரிவித்தார். அப்பகுதியின் பொறுப்பாளர் தகவல்களை சரிபார்ப்பார். விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை ஒரு முறை மட்டும் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.


ALSO READ: PM Kisan Yojana: மொபைலில் இருந்து எப்படி விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR