24-வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று இரண்டு பேர் சேர்ந்து ஒரு வயதான முதியவரை தாங்கி பிடித்து கொண்டு நடந்து வருகின்றனர். அந்த முதியவர் வெள்ளை தாடியுடன் நடக்கவே முடியாமல் வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வருகிறார். X தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பெங்களூரு அருகே குகையிலிருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டுளளார் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதன் உண்மையை தன்மையை தெரியாத பலர் இதனை அதிகம் ஷேர் செய்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் வைரலாக இந்த வீடியோ X தளத்தில் மட்டும் 35 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக் - பின்னணி என்ன?


பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக உள்ள இந்த வீடியோ மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவை தாண்டி உலகளவிலும் வைரல் ஆனது. "இந்த இந்தியர் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது" என்று தலைப்பு இருந்ததால் பலரும் இதனை நம்பிவிட்டனர். இந்த வீடியோ வேகமாகப் பரவிய போதிலும், அந்த முதியவரின் வயது பற்றி பலருக்கும் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் உண்மையை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.



இதன் மூலம் இந்த வீடியோ பற்றிய உண்மைகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சியாரம் பாபா என்ற இந்து துறவி என்பதும், அவருக்கு 188 வயது ஆகவில்லை, சுமார் 110 வயது இருக்கும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் X தளமும் இது போலி செய்தி என்பதை தெரிவித்துள்ள்ளது. வைரலாக அந்த வீடியோவின் கீழ், "இது தவறான தகவல்! அந்த முதியவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் சியாரம் பாபா என்ற இந்து துறவி ஆவார். அவரின் வயது 110 தான்" என்று தெரிவித்துள்ளது.



இது தவிர, செய்திகளின் உண்மை தன்மையை சரிபார்க்கும் டி-இன்டென்ட் டேட்டா குழுவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வீடியோ மற்றும் அவரது வயது குறித்து தவறான செய்திகள் பரவி உள்ளது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது குறித்து X தளத்தில் டி-இன்டென்ட் டேட்டா குழு, "இது ஒரு தவறாக தகவல். 188 வயதான இந்தியர் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, முதியவருக்கு சிலர் உதவி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் அந்த முதியவர் மத்திய பிரதேசத்தில் வசிக்கும் 'சியாரம் பாபா' என்ற இந்து துறவி. எனவே தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | ஹரியானாவில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்? ஜம்மு காஷ்மீரில் காத்திருக்கும் ட்விஸ்ட்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ