பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு(central government), விவசாய குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஏற்கனவே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றிப் பெறாத நிலையில், விவசாயிகளுடன் (Farmers) ஐந்தாவது சுற்று சந்திப்புக்கு முன்னதாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் புதுடடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். 



இந்த கலந்தாலோசனையில் எட்டப்படும் முடிவின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறும்.எனவே, அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியுடனான (PM Modi)ஆலோசனையின் முடிவை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


டெல்லியின் முக்கிய எல்லைகளையும் முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் டெல்லியில் நிலவும் குளிருக்கு (Cold) இடையில், அரசியல் நிலைமை சூடாகிவருகிறது.


Also Read | Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 
zeenews.india.com/tamil/topics/