மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்தில், சுமார் 8.5 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 370 பேர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் கேரளாவில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில், நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள நிலையில் கர்நாடக - கேரளா இடையே பேருந்துசேவை துவக்கப்பட்டது. இதையடுத்து இன்று கேரளா மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது..!  



இதை தொடர்ந்து, கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கிய..!