Sheikh Hasina: வங்கதேசத்தில் நடந்த 1971ஆம் ஆண்டு விடுதலை போராட்டத்தின் தியாகிகள் மற்றும் அதில் போராடியவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த இட ஒதுக்கீடு என்பது நாட்டில் வேலைவாய்ப்பை கேள்விக்குள்ளாக்கும் எனவும், இது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினருக்கே அதிகம் வாய்ப்பை தரும் என்றும் இளைஞர்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுக்க போராட்டத்தில் இறங்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போராட்டத்தை தொடர்ந்து, அவாமி லீக் ஆதரவாளர்கள் - போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக உருமாறியது. இந்த வன்முறையில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியதை தொடர்ந்து, ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் அழுத்தம் தர தொடங்கினர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நாட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ராணுவமும் பிரதமரை பதவி விலகும்படி அழுத்தம் கொடுத்தது. 


மேலும் படிக்க | வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா... இடைக்கால ஆட்சி அமையும் - ராணுவ தளபதி பேச்சு!


போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது தங்களை ஷேக் ரிஹானா உடன், ஷேக் ஹசீனா வங்கதேச்சத்தை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தின் விமானப்படையை சேர்ந்த  C-130J என்ற ராணுவ விமானத்தில் அவர் தாக்காவில் இருந்து இந்தியாவின் உத்தர பிரதேச காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்திற்கு வந்தார். அவரின் அந்த ராணுவ விமானம் AJAX1431 என்றும் அழைக்கப்படுகிறது. ஹிண்டன் விமானப் படை தளத்தில் ஷேக் ஹசீனாவை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். அப்போது வங்கதேசத்தின் சமீபத்திய நிலைமை குறித்தும், அவரது அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 


மேலும், ஷேக் ஹசீனா இங்கிலாந்திடம் புகலிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு அனுமதி கிடைத்த உடன் இந்தியாவில் இருந்து அவர் புறப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் ஷேக் ஹசீனா வந்த வங்கதேசத்தின் ராணுவ விமானம் C-130J ஹிண்டன் விமானத் தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டது. ஹசீனா அடுத்து இங்கிலாந்து செல்கிறாரா அல்லது வேறு எங்காவது செல்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், ஷேக் ஹசீனாவின் ராணுவ விமானத்தை இந்தியாவின் பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.



மேலும் படிக்க | எங்கு இருக்கிறார் ஷேக் ஹசீனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ