வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா... இடைக்கால ஆட்சி அமையும் - ராணுவ தளபதி பேச்சு!

Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Aug 5, 2024, 04:14 PM IST
  • ஷேக் ஹசினா பிரதமர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்.
  • வேலைவாய்ப்பில் அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
  • இதனால், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்.
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா... இடைக்கால ஆட்சி அமையும் - ராணுவ தளபதி பேச்சு!

Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கார் உஸ்-ஜமான் உறுதி செய்தார். மேலும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவோம் எனவும் அவர் பேசியுள்ளார். ஷேக் ஹசினா மற்றும் அவரது தங்கை ஷேக் ரிஹானா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். 

Add Zee News as a Preferred Source

ஷேக் ஹசினா வெளியேற்றத்திற்கு பின்னர் ராணுவ தளபதி ஆற்றிய உரையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் ராணுவ தளபதி உறுதியளித்தார். எனவே, போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் ராணுவ தளபதி கோரிக்கை வைத்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் எனவும் ராணுவ தளபதி பேசியிருக்கிறார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் எனவும் தெரிவித்தார். 

இதன்மூலம், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன. இன்னும் சிலர் அகர்தலாவில் அவர் வந்திறங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஒரு சில ஊடகங்களோ, ஷேக் ஹசினா ஃபின்லாந்து பறந்துவிட்டதாகவும் கூறுகின்றன. 

மேலும் படிக்க | இஸ்ரேல் vs லெபனான் உச்சகட்ட போர் பதற்றம்! காரணம் என்ன?

என்ன பிரச்னை?

1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போரின் தியாகிகள் மற்றும் அதற்காக போராடியவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கடந்த 2018ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அப்போது எழுந்த மாணவர் போராட்டத்தால் இந்த சட்டம் முடக்கப்படுவதாக ஷேக் ஹசினா அறிவித்தார். 

தற்போது இந்த இட ஒதுக்கீட்டின் மீதான தடையை நீக்கி கடந்த மாதம் தாக்கா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் மாணவ அமைப்புகளும், இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு எதிராக அரசின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி, போராட்டம் நடத்திய இளைஞர்கள் உடன் மோதலில் ஈடுபட்டனர். இவர்களை தடுக்க பாதுகாப்பு படையினரும் அதிரடியில் இறங்க, அங்கு நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தேறியது.

300 பேருக்கு மேல் உயிரிழப்பு

தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஷேக் ஹசீனாவின் சர்ச்சை பேச்சால் இந்த விவகாரம் இன்னும் உக்கரமானது. அவர் பேசிய அரசு சேனலின் அலுவலகம் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. கடந்த மாதத்தில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், நேற்றில் இருந்து தீவிரமாகி உள்ள வன்முறையில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

15 ஆண்டுகளாக அவாமி லீக் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினா இன்று அவரது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக வங்கதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும், இளைஞர்களுக்கு இதனால் அதிக வேலைவாய்ப்பின்மை ஏற்படும் என்பதால் பல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எங்கு தஞ்சம் புகுந்துள்ளார்?

விடுதலை போரின் தியாகிகள் மற்றும் அதற்காக போராடியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை வாங்காவிட்டால், ரஸாகர்ஸ் (Razakars) மக்களுக்கா இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என ஹசினா பேசியிருந்தார். இந்த பேச்சுதான் மாணவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ரஸாகர்ஸ் என்றால் வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் ஆதரவு மனநிலையில் இருந்தோர். எனவே, போராட்டக்காரர்களை ரஸாகர்ஸ் என்ற துரோகிகளுடன ஒப்பிடுவதா என இளைஞர்கள் கௌந்தளித்து அவரை பதவி விலக அழுத்தம் அளித்தனர். 

போராட்டம் வலுத்த காரணத்தாலும், ராணுவத்தின் அழுத்தத்தாலும் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு ஷேக் ஹசினா தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இந்தியாவின் திரிபுராவில், டெல்லியில் தஞ்சம் அடையாள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்து ஃபின்லாந்து அல்லது இங்கிலாந்துக்கு இந்தியாவில் இருந்து செல்லவார் எனவும் கூறப்படுகிறது.   

மேலும் படிக்க | ஸ்டார் லைனர் கோளாறு சரி செய்யப்பட்டதா? நாசா வாய் திறக்காதது என்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News