Breaking: ஏழை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்: மத்திய அரசு
பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், இப்போது குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதலாக 5 கிலோ அரிசி, கோதுமையை பெற முடியும்.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, அதாவது பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், இப்போது குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதலாக 5 கிலோ அரிசி, கோதுமையை பெற முடியும்.
80 கோடி மக்களுக்கு நன்மை கிடைக்கும்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டில், `` கொரோனாவின் அதிகரித்துவரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் கீழ் இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை கூடுதலாக அளிக்க முடிவெடுத்த பிரதமர் நரிந்திர மோடிக்கு நன்றி. இதன் மூலம் நாட்டின் சுமார் 80 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த பேரழிவில் ஒவ்வொரு நொடியிலும் மோடி அரசாங்கம் பொதுமக்களுடன் நிற்கின்றது" என எழுதியுள்ளார்.
ALSO READ: COVID-19 Update: இந்தியாவில் 3,32,730 பேருக்கு தொற்று உறுதி; 2,263 பேர் பலி!
மாநிலங்கள் பொருளாதார தொகுப்பைக் கோரின
பல மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து பொருளாதார தொகுப்பை கோரி வருகின்றன. மாநிலங்கள் உதவி கோரி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாநிலங்களுடன் நடைபெற்ற சந்திப்பில், பல முதலமைச்சர்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு முன் வைத்திருந்தனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டு மக்களின் முன்னால் வாழ்வாதரத்துக்கான கேள்வியும் பசி நெருக்கடியும் உள்ளது. சென்ற ஆண்டு இருந்ததைப் போல, மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இவற்றின் காரணமாக மத்திய அரசு ஏழை மக்களுக்காக இந்த இலவச ரேஷனுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, நாட்டில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Corona Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவி வருகிறது, இந்தியாவில் ஒரே நாளில் , 2,263 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ALSO READ: இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR