கடற்கரையில் தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கம்! அள்ளிச்செல்லும் மக்கள்!
அனைவரும் நகைக் கடைகளில் தங்கத்தை வாங்கும்போது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரையில் தங்கம் கிடைப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் உப்பாடா என்ற கடற்கரையில் மக்கள் தங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அங்கு தங்கம் கிடைப்பது உண்மைதான். அங்கு பளபளப்பான தங்கத் துண்டுகள் மற்றும் நகைகள் கிடைத்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். உப்பாடா கடற்கரைக்கு இந்த பொக்கிஷங்களைத் தேடி எடுத்தப்பதற்காகவே தினசரி பலரும் வருகை தருகின்றனர். சல்லடை போட்டு தங்க துகள்களை தேடி எடுத்து செல்கின்றனர். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
உப்பாடா கடற்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவர்கள், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அங்குள்ள மணலில் சிறிய தங்கத் துண்டுகளையும், பளபளப்பான மணிகளையும் பார்த்துள்ளனர். சில நேரத்தில் தங்க நகைகள் கூட கிடைத்து விடுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். நவம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய நிவார் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இந்த புயலின் போது, உப்பாடாவில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. புயல் கடந்த பிறகு உப்பாடா கடற்கரையில் நிறைய தங்க மணிகளை பார்த்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, தங்கத்தை தேடும் பணியில் அதிகமானோர் கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர்.
உப்பாடா கடற்கரையில் உள்ள மணலில் இருந்து எடுத்த சிறு சிறு தங்க துகள்களையும், சிறிய தங்க நகைகளையும் மக்கள் எடுத்து வந்து கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பு, கடலில் ஏற்பட்ட பெரிய சீற்றத்தினால் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கோவில்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புயல்களின் போது, கோவில்களில் இருந்து தங்க நகைகள் மற்றும் வீடுகளில் இருந்த பிற பொருட்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அவை தான் இந்த புயலில் மீண்டும் வெளியில் வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். இவற்றை தேடி தேடி எடுத்து விற்பனை செய்கின்றனர்.
மேலும் நீண்ட காலத்திற்கு முன்பு, ஆந்திரா பகுதியில் வாழ்ந்த மக்கள் புதிய வீடுகள் அல்லது கோயில்கள் கட்ட விரும்பினால், அவர்கள் இந்த கடற்கரைக்கு வந்து தங்கத்தை புதைத்து வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த தங்கங்கள் கூட கடலில் அடித்து செல்லப்பட்டு, தற்போது வெளியில் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் இந்த தங்கத்தை மக்கள் கடைகளில் சுமார் 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய நகைகளாக இருந்தால் 2000 முதல் 4000 ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள்: சம்பளம் எகிறப்போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ