7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு புத்தாண்டில் 2 பரிசுகள் காத்திருக்கின்றன.
7th Pay Commission: புதிய ஆண்டில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) 3% அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 56% ஆக அதிகரிக்கும். இது தவிர, பட்ஜெட்டில் நிலுவைத் தொகையை அளிப்பது பற்றி மத்திய அரசு யோசிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் நம்புகின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழு, டிஏ அரியர் என இவர்களுக்கு பல கோரிக்கைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7வது ஊதியக்குழு: 2025 புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பரிசுகள் நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக ஊழியர்களுக்கு டிஏ உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் ஆகிய 2 பரிசுகள் கிடைக்கக்கூடும். புதிய ஆண்டில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) 3% அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 56% ஆக அதிகரிக்கும்.
ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி கணக்கிடப்படும். இந்த குறியீட்டு எண்களின் போக்கு, 3% டிஏ உயர்வு இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA/DR விகிதங்கள், AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசால் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண் 144.5 ஐ எட்டியுள்ளது. டிஏ மதிப்பெண் 55.05% ஐ எட்டியுள்ளது.
ஆகையால் டிஏ 3% அதிகரிப்பது உறுதி. இருப்பினும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. தற்போது 48 லட்சம் மத்திய ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 53% அகவிலைப்படியைப் பெற்று வருகிறார்கள்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. இது ஊதிய அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ: DA% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ: DA% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100
48 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 64 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, கொரோனா காலத்தில் ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகை இன்னும் அளிக்கப்படவில்லை. இதை அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இதுகுறித்து, ஊழியர் சங்கம், மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பிப்ரவரி 2025ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 18 மாத டிஏ அரியர் தொகை (18 Month DA Arrears) குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பட்ஜெட்டில் நிலுவைத் தொகையை அளிப்பது பற்றி மத்திய அரசு யோசிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் நம்புகின்றன. ஆனால். இது தொடர்பாக அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.