CGHS திட்டம்: மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தை அரசு திருத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யக் கோரி அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த செய்தி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தியாக, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) இந்திய மத்திய அரசின் பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு திருப்பிச் செலுத்துதல் மற்றும் பணமில்லா வசதிகள் வழங்கப்படுகின்றன.


அரசின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வீடியோ கால் மூலமாகவும் பரிந்துரை செய்யலாம். CGHS நோயாளி செல்ல முடியாவிட்டால், குடும்ப உறுப்பினரை அனுப்புவதன் மூலமும் அவர் பரிந்துரை பெறலாம்.


சிஜிஎச்எஸ் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்கள்


OPD சிகிச்சைக்கான கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


IPD அதாவது அனுமதிக்கப்பட்ட நோயாளியிக்கு மருத்துவ ஆலோசனைக்கான கட்டணம் 300 ரூபாயில் இருந்து 350 ரூபயாக உயர்த்தப்பட்டது.


முன்னதாக ஐசியூக்கான அறை வாடகை கட்டணம் ரூ.862 ஆக இருந்தது. தற்போது இது ரூ.5400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பெண்களுக்கு பம்பர் செய்தி: மோடி அரசின் அசத்தல் வருமானம் அளிக்கும் சேமிப்பு திட்டம்


அறை வாடகை


முன்பு பொது வார்டு அறைக்கான கட்டணம் 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, தற்போது 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பகுதியளவு தனியார் அறைக்கான வாழகை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், தனியார் வார்டுக்கான கட்டண வரம்பு என்பது 3 ஆயிரத்தில் இருந்து 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


CGHS பேனல்


அரசு ஊழியர்கள் CGHS அதாவது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுகிறார்கள், இதில் CGHS பேனலுடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து இலவச சிகிச்சையை மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கிறது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மற்றும் அறை வாடகைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளின்படி கட்டணத்தை செலுத்துகிறது.


அரசுக்கு அதிக சுமை


புதிய கட்டணத்திற்கு பிறகு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.240 முதல் 300 கோடி வரை கூடுதல் சுமை ஏற்படும். மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற பல்வேறு மருத்துவ முறைகளின் கீழ் சுகாதாரப் பாதுகாப்பை உள்ளடக்கியது.


மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு


79 நகரங்களில் உள்ள 1670 மருத்துவமனைகள் CGHS உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியுடன் 213 கண்டறியும் ஆய்வகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், இந்தியாவில் உள்ள CGHS பயனாளிகளுக்கு விரிவான சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. CGHS, சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாக மற்றும் பத்திரிகை ஆகியவற்றில் இருந்து பயனாளிகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் செயல்படுகிறது.


CGHS, ஒரு பெரிய பயனாளிகளின் தளத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, திறந்தநிலை தாராள அணுகுமுறையில் சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 71 நகரங்களில் சுமார் 35 லட்சம் பயனாளிகள் CGHS-ன் கீழ் உள்ளனர்.   


மேலும் படிக்க | ரேஷன் விதிகளில் அரசு செய்த மிக்கப்பெரிய மாற்றம், இனி இரட்டிப்பு பலன் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ