இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் கிடைக்கும் -ரிசர்வ் வங்கி அதிரடி
ஆகஸ்ட் 1 முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் தளம் அனைத்து நாட்களிலும் செயல்பட உள்ளதால், பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கல் இருக்காது.
புது டெல்லி: நீங்கள் ஈ.எம்.ஐ செலுத்த வேண்டிய தேதி வார இறுதி அல்லது வங்கி விடுமுறை நாட்களில் வந்தால், கடன் வழங்கிய வங்கி, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாள் முன்னதாக அல்லது அடுத்த வேலைநாளில் ஈஎம்ஐ பணத்தை பிடித்தம் செய்வது வழக்கம்.
ஆனால் ஆகஸ்ட் 1 முதல் என்.ஏ.சி.ஹெச் (NACH) வசதியை அனைத்து நாட்களிலும் (24x7) செயல்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவித்துள்ளதால், இனி சரியான தேதியில் உங்கள் ஈ.எம்.ஐ எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல வங்கி விடுமுறையாக இருந்தாலும், உங்கள் மாத சம்பளமும் சரியான நாளில் வங்கியில் வரவு வைக்க முடியும்.
தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் NACH வசதி செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் அனைத்து நாட்களிலும், இந்த வசதி செயல்படும் என்பதால், சரியான நேரத்தில் பரிவர்த்தனைகள் நடைபெறும்.
ALSO READ | இந்த மாத வங்கி விடுமுறைகள் எப்போது? பட்டியலைப் பார்க்கவும்!
உங்கள் நிறுவனம், வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தவும், அதேபோல உங்கள் வங்கியில் இருந்து கடன்களின் ஈ.எம்.ஐ தொகையை செலுத்துவதும், இந்த NACH தளத்தின் மூலம் நிகழ்கிறது. அரசாங்கங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் வங்கிகள், உங்கள் மானியங்கள், ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை விநியோகிக்க நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் தளத்தை பயன்படுத்துகின்றன. பில் செலுத்துதல், கடன்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்களை சேகரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
நாச் (NACH) ஒரு பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் பயன்முறையாகும். நேரடி பயன் பரிமாற்றத்தின் (Direct benefit Transfer) மூலம் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு பணம் செலுத்த இது பயன்படுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, ஆகஸ்ட் 1 முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் தளம் அனைத்து நாட்களிலும் செயல்பட உள்ளதால், பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கல் இருக்காது.
ALSO READ | New Rs 100 Note: வார்னிஷ் பூச்சுடன் விரைவில் வெளிவரும் 100 ரூபாய் நோட்டு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR