வங்கிகளுக்கு விடுமுறை எப்போது என்பதைத் தெரிந்துக் கொண்டால் அதற்கேற்றாற்போல் நமது வேலைகளை திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும். விடுமுறைகள் மாநிலத்திலிருந்து மாநிலம் வேறுபடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை பட்டியலை தவறாமல் பார்த்து விட்டு செல்வது நல்லது. அதிலும் இந்த கொரோனா பேரிடர் சூழ்நிலையில் அநாவசியமாக வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்.
இந்த மாதம் (ஜூன் 2021) மாதம் வங்கிக்கு செல்வதற்கான அவசியம் ஏற்படும். இந்த விடுமுறை பட்டியலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், ஜூன் மாதத்தில் குறைந்தது ஒன்பது நாட்களுக்கு மூடப்படவுள்ளன.
Also Read | கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – தமிழக அரசு
இந்த விடுமுறை நாட்களில் வார இறுதி நாட்கள் மற்றும் பல்வேறு பண்டிகைகள் அடங்கும். இந்த மாதத்தில் சில மாநிலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு மூன்று விடுமுறைகள் இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள விடுமுறை நாட்களில் பொதுத்துறை வங்கிகள், தனியார் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய வங்கிகள் என அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றன என்றாலும், சில விடுமுறைகள் அனைவருக்கும் பொதுவானவை. அவை, குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) மூடப்பட்டிருக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத், குரு நானக் ஜெயந்தி, புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளிலும் வங்கிகள் மூடப்படும்.
Also Read | கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்
மிசோரமில், ஐஸ்வால் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜூன் 15 ஆம் தேதி YMA Day மற்றும் ராஜா சங்கராந்திக்கு (Raja Sankranti) அன்று அனைத்து வங்கிகளும் மூடப்படும். ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில், குரு ஹர்கோபிந்த் சிங்கின் பிறந்த நாளான ஜூன் 25ஆம் நாளன்று வங்கிகளுக்கு விடுமுறை. ஜூன் 30 ஆம் தேதி, மிசோரத்தின் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூடப்படுகின்றான. ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட வேண்டியது கட்டாயம் என இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) அறிவுறுத்தியுள்ளது.
Also Read | Google Photos: கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை, கட்டண விவரங்கள்
ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறைகளின் முழு பட்டியல்;
ஜூன் 6: வார விடுமுறை (ஞாயிறு)
ஜூன் 12: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 13: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
ஜூன் 15: YMA Day/Raja Sankranti - மிசோரத்தின் ஐஸ்வால் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரில் விடுமுறை
ஜூன் 20: வார விடுமுறை (ஞாயிறு)
ஜூன் 25: குரு ஹர்கோபிந்த் சிங் பிறந்த நாள் - ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை
ஜூன் 26: நான்காவது சனி
ஜூன் 27: வார விடுமுறை (ஞாயிறு)
ஜூன் 30: Remna Ni - மிசோரத்தின் ஐஸ்வாலில் விடுமுறை
ரிசர்வ் வங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கிய விடுமுறை பட்டியலின் அடிப்படையில் இந்த விடுமுறை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Also Read | கொரோனா மரணம்: 2 ஆண்டுகளுக்கு ESIC, EPFOவில் சிறப்புச் சலுகை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR