காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல்...சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசிற்கு பின்னடைவு
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார்.
2015-ம் ஆண்டு ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். இந்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் முடங்கியது. குறுகிய காலத்தில் இளைஞர்களிடையே பிரபலமான ஹர்திக் படேல், 2017 குஜராத் சட்டப்பேர்வைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்த அவர், 2020-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் .
கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஹர்திக் படேலுக்கு சுமூகமான உறவு இல்லாததாகவும், மூத்த தலைவர்களின் புறக்கணிப்பால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குஜராத் வந்தபோது ஹர்திக் படேலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நிகழவில்லை. அதிருப்தியில் உள்ள ஹர்திக் படேல் பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஹர்திக் படேல் அதனை மறுத்து வந்தார்.
மேலும் படிக்க | பாஜகவிடம் நல்ல விஷயங்களும் உள்ளன...காங்கிரசிற்கு அதிர்ச்சி அளித்த ஹர்திக் படேல்
இந்த நிலையில் காங்கிரசில் இருந்து விலகுவதாக ஹர்திக் படேல் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் தலைமை குஜராத்தை கடுமையாக வெறுப்பதாகவும், குஜராத் மாநிலத்தின் மீது காங்கிரசிற்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் கூறினார். "மக்களிடம் முன்வைப்பதற்கான வழிகாட்டுதல் எதுவும் அவர்களிடம் இல்லாததால், கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார்.
கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் தான் சந்திக்க முயன்றபோது, அவர்கள் குஜராத் தொடர்பான பிரச்சினைகளைக் கேட்பதற்கு பதில் செல்போன்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்ததாகவும், மக்களுடன் இணைந்து செயல்படுவதை விட டெல்லியில் இருந்து வரும் தலைவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச் தயார் செய்வதற்கே மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் ஹர்திக் படேல் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் படேல் காங்கிரசில் இருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மோசமான நிலையில் காங்கிரஸ் கட்சி..! தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR