உள்ளூர் நிலையில் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் , ஹரியானா அரசு பானிபட் மற்றும்  கர்னல் நகரை மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டிகர்: உள்ளூர் நிலையில் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் , ஹரியானா (Haryana) அரசு பானிபட்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவில் மருந்துகளை தயாரிப்பதற்கான பூங்காவை அமைப்பதற்கும் கர்னல் நகரை மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.


ALSO READ | ITBP கான்ஸ்டபிள் தேசிய தலைநகர் தில்லியில் தற்கொலை..... போலீஸ் விசாரணை..!!!


இந்திய அரசின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தொழில்துறைக்கான பகுதிகளில், பானிபட்டில் மிகபெரிய அளவில் மருந்துகளை தயாரிப்பதற்கான வளாகம் அமைக்கப்படும். மிகப்பெரிய அளவில் மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பூங்கா மேம்படுத்தப்படும்.


ஹரியானா (Haryana) முதலமைச்சர் (CM) மனோகர் லால் கட்டர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) பார்ம்ஸ்கோப் திட்டத்தை ஆன்லைன் தளம் மூலம் அறிவித்து உரையாற்றும்போது இதனைத் தெரிவித்தார். இது தவிர, இந்த தகவல்களை மாநில அரசும் வெளியிட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநில முதல்வர் மனோஹர் லாக்ல் கட்டர், கர்னாலில் 225 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான மிக்ப்பெரிய மையத்தை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த இடம், பானிபட்டின் மொத்த மருந்து உற்பத்திக்கான பூங்காவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


ALSO READ | சீனாவின் துரோகத்தினால் கோபமாக உள்ள அமெரிக்காவில் உள்ள NRI நடத்திய அமைதி போராட்டம்...!!!      


மாநில அரசின் இந்த அறிவிப்புகள் தற்சார்பு கொண்ட இந்தியாவை (atmanirbhar bharat) உருவாக்குவதற்கான மிகப்பெரிய முயற்சி என்று முதல்வர் விவரித்தார். இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பும் உருவாகும். இது Made in India  என்பதுடன் Make for the world என்பதாகவும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.


கொரோனாவினால், இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதால், அதனை மேம்படுத்த இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.