ITBP கான்ஸ்டபிள் தேசிய தலைநகர் தில்லியில் தற்கொலை..... போலீஸ் விசாரணை..!!!

புது தில்லியில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த  (ITBP) கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2020, 01:50 PM IST
  • புது தில்லியில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த (ITBP) கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 31 வயதான இவர் உத்திரபிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஆவார்.
ITBP கான்ஸ்டபிள் தேசிய தலைநகர் தில்லியில் தற்கொலை..... போலீஸ் விசாரணை..!!! title=

புது தில்லி (New Delhi): புது தில்லியில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த  (ITBP) கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புது தில்லியில் உள்ள கரோல் பாக் காவல் நிலைய பகுதியில் ITBP கான்ஸ்டபிள், தன்னிடம் உள்ள துப்பாக்கியினால், தன்னை தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெள்ளிக் கிழமை அதாவது ஜூன் மாதம் 26ம் தேதி நடந்துள்ளது.  சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை குறிப்போ அல்லது கடிதமோ எதுவும் கிடைக்கவில்லை.

ALSO READ | சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள் கோரிக்கை...!!!

ITBP 22 பட்டாலியன் சங்கம் விஹாரைச் சேர்ந்த சந்தீப் குமார்  என்பவர் 31 வயது இளைஞன் ஆவார். அவர் மற்ற ஊழியர்களுடன் காவல் நிலையத்திற்கு கரோல் பாக் பணியாற்ற வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பணியை முடித்த பின், குமார் தனது பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ​​அவர் தன்னிடம் இருந்த சர்வீஸ் ரிவால்வரை வெளியே எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் நடந்துள்ளது.

அவர் உடனடியாக புதுதில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி , உத்தரபிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த குமார் அவர்கள் ITBP-யில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார்.

ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

துணை கமாண்டன்டாக உள்ள ராஜன் பாபுவின் மேற்பார்வையில் பணி புரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் வந்த பின்னரே பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை காவல் துறையின் விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News