கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. mRNA தொழில் நுட்பத்தை கொண்டு  இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசியான HGCO19 தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி செய்யப்படும் பரிசோதனை பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்தியாவின் முதக்ல் mRNA தடுப்பூசியான HGCO19  என்ற மருந்தை புனேவின் ஜெனோவா உருவாக்கியுள்ளது என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள  மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள  மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.


புனேவை தளமாகக் கொண்ட ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் (Gennova Biopharmaceuticals) mRNA தடுப்பூசியின் 2 ஆம் கட்டத் பரிசோதனை தரவைச் சமர்ப்பித்துள்ளது. கட்டம் 3 தரவுகளுக்கான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளது.


இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (DCGI) நிபுணர் குழு (SEC) விரைவில் தரவை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. Omicron மாறுபாட்டிற்கான mRNA தடுப்பூசியை Gennova Biopharmaceuticals உருவாக்கியுள்ளது என்றூம்,  விரைவில் செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்காக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


அமெரிக்காவின் பைசர் (Pfizer), மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் mRNA தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் இதுவாகும். இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம். mRNA தடுப்பூசி, பயோடெக்னாலஜி துறையின் Ind-CEPI  திட்டத்தின் கீழ் உதவியை பெற்று வருகிறது.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR