இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஊச்சகட்டமாக 32,695 கொரோனா பாதிப்புகள் மற்றும் 606 இறப்புகள் பதிவாகியுள்ளன.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றின் மொத்த எண்ணிக்கை 9,68,876-யை எட்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. 


வியாழக்கிழமை காலை நாட்டில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,68,876-யை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 1 மில்லியன் (10 லட்சம்) பாதிப்புகளின் எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஸ்பைக்கான 32,695 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. ஒரே நாளில் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளை இந்தியா கண்டது இதுவே முதல் முறை. அதே 24 மணி நேர காலப்பகுதியில் COVID-19 இலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக இருந்தது, மொத்த இறப்பு எண்ணிக்கை 24,915 ஆக உள்ளது.


வரும் சனிக்கிழமைக்குள் இந்தியாயில் 10 லட்சம் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கையை கடக்கும் என்று தெரிகிறது. இது ஜூலை 14 அன்று 9 லட்சம் கோவிட் -19 பாதிப்புகளைத் தாண்டியது; 8 லட்சம் தொற்றுகளில் இருந்து 9 லட்சமாக உயர மூன்று நாட்கள் ஆனது. இந்தியாவில் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது ஒரு வாரமாக தினமும் 26,000-க்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது.


S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths** Total Confirmed cases*
1 Andaman and Nicobar Islands 46 130 0 176
2 Andhra Pradesh 16621 18378 452 35451
3 Arunachal Pradesh 306 153 3 462
4 Assam 6447 12173 46 18666
5 Bihar 6970 13462 180 20612
6 Chandigarh 155 459 11 625
7 Chhattisgarh 1195 3324 20 4539
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 180 357 2 539
9 Delhi 17807 95699 3487 116993
10 Goa 1259 1674 18 2951
11 Gujarat 11187 31286 2079 44552
12 Haryana 5320 17667 319 23306
13 Himachal Pradesh 351 979 11 1341
14 Jammu and Kashmir 5123 6337 206 11666
15 Jharkhand 1797 2485 38 4320
16 Karnataka 27859 18466 928 47253
17 Kerala 4884 4634 35 9553
18 Ladakh 177 964 1 1142
19 Madhya Pradesh 5053 13908 682 19643
20 Maharashtra 112099 152613 10928 275640
21 Manipur 711 989 0 1700
22 Meghalaya 278 66 2 346
23 Mizoram 79 159 0 238
24 Nagaland 554 348 0 902
25 Odisha 4345 10476 77 14898
26 Puducherry 686 889 21 1596
27 Punjab 2711 5867 221 8799
28 Rajasthan 6405 19502 530 26437
29 Sikkim 133 87 0 220
30 Tamil Nadu 47343 102310 2167 151820
31 Telangana 12957 25999 386 39342
32 Tripura 661 1604 3 2268
33 Uttarakhand 787 2948 50 3785
34 Uttar Pradesh 14628 25743 1012 41383
35 West Bengal 12747 20680 1000 34427
  Cases being reassigned to states 1285     1285
  Total# 331146 612815 24915 968876

READ | ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு! 


இந்த நம்பிக்கையின் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், COVID-19பாதிப்புகளில் மீட்பு விகிதம் 63.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. மீட்டெடுப்புகளின் விகிதம் 96.09 என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிப்புகள் மற்றும் இறப்புகள் இரண்டிலும் COVID-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 2,75,640 கோவிட் -19 பாதிப்புகளும், சுமார் 10, 928 இறப்புகளும் பதிவாகியுள்ளன.


புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 1,51,820 கோவிட் -19 தொற்றுகளும், டெல்லியில் 1,16,993 தொற்றுகளும் பதிவாகியுள்ளன. மேலும், 13 மாநிலங்களில் தலா 10,000-க்கும் மேற்பட்ட COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.