ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் கோவிட் -19 தடுப்பூசி குறித்த நல்ல செய்தி ஜூலை 16 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..!

Last Updated : Jul 16, 2020, 10:36 AM IST
ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!  title=

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் கோவிட் -19 தடுப்பூசி குறித்த நல்ல செய்தி ஜூலை 16 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..!

இந்தியா மற்றும் பல நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. இந்நிலையில், ஆஸ்ட்ராஜெனெகாவுக்கு (AstraZeneca) உரிமம் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாத்தியமான கொரோனா வைரஸின் ஆரம்ப சோதனைகள் குறித்த நேர்மறையான செய்திகளை வியாழக்கிழமை (ஜூலை 16) அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

ITV-யின் அரசியல் ஆசிரியர் ராபர்ட் பெஸ்டன் கூறுகையில், கோவிட் -19 தடுப்பூசி வேட்பாளரின் மூன்றாம் கட்ட சோதனைகள் ஜூன் மாதம் பிரேசிலில் தொடங்கியது. மூன்றாம் கட்ட சோதனைகளில் ஆயிரக்கணக்கான மனித தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பெஸ்டன் கூறினார்.

"ஆஸ்ட்ராஜெனெகாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் ஆரம்ப சோதனைகள் குறித்து விரைவில் (ஒருவேளை நாளை) சாதகமான செய்திகள் வரும் என்று நான் கேள்விப்படுகிறேன்" என்று பெஸ்டன் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார்.

READ | COVID-19 தடுப்பூசி பாதுகாப்பானது; ஜூலை இறுதிக்குள் தயாராகும்: ரஷ்யா

"தடுப்பூசி ஆன்டிபாடி மற்றும் T-செல் (கொலையாளி செல்) பதிலை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அது செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெகுஜன உற்பத்திக்கு செல்லக்கூடும்" என்று அவர் மேலும் கூறினார்.

மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் ‘‘இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது ஊக்கம் அளித்துள்ளது. முதல் கட்ட பரிசோதனைக்கான முடிவுகள் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படலாம்’’ எனத் தெரிவித்துள்ளது. பிரிட்டன், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல கொரோனா வைரஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் தற்போது உலகளவில் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News