Himachal Pradesh News In Tamil: இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று (பிப்ரவரி 28, புதன்கிழமை) சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியாவின் அறையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி செயல்பட்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விவரம்


ஜெய் ராம் தாக்கூர், விபின் பர்மர், ரந்தீர் சர்மா, ஹன்ஸ் ராஜ், வினோத் குமார், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, லோகிந்தர் குமார், திரிலோக் ஜம்வால், சுரீந்தர் ஷோரி, பூரன் சந்த், தலிப் தாக்கூர், இந்தர் சிங், ரன்பீர் நிக்கா மற்றும் தீப் ராஜ் உள்ளிட்ட 15 பாஜக எம்எல்ஏக்கள் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


சட்டசபை ஒத்திவைப்பு


இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்ததால் சட்டசபை முடங்கியது. 


ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்


சட்டசபையின் வருடாந்திர பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டசபையில் மாநில நிதி மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


ஆனால், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக ஆட்சி கவிழ்வதைத் தடுக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டி உள்ளது.



மேலும் படிக்க - ஸ்கெட்ச் போடும் பாஜக..! தேர்தலில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்?


இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் - பாஜக


பாஜகவின் ராஜ்யசபா வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது. எனவே, அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்படும். அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும். இங்கு (இமாச்சலப் பிரதேசம்) பாஜக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒன்பது எம்எல்ஏக்கள் (கட்சி மாறி வாக்களித்தவர்கள்) எனக்கு ஆதரவாக உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.


முன்னாள் முதல்வர் மகன் விக்ரமாதித்ய சிங் ராஜினாமா


இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கலில், மாநில அமைச்சரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் இன்று (புதன்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார்.


தற்போதைய சூழ்நிலையில் நான் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக நீடிப்பது சரியல்ல என்பதை மட்டுமே நான் கூற விரும்புகிறேன். எனவே, அமைச்சர்கள் குழுவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தனது ராஜினாமா குறித்து விக்ரமாதித்ய சிங் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் படிக்க - ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தமும் நமக்கு தான்.. 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- அண்ணாமலை சூளுரை


காங்கிரஸ் ஆட்சியை சாடிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்


காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று மாநிலத்தின் எம்.பி.யான மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகிறார்.


அவர் கூறுகையில், "போலியான வாக்குறுதிகளை அளித்து இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைந்த பிறகு அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களிடம் பதில் இல்லை. எந்த வேலையும் நடக்கவில்லை, காங்கிரஸின் சொந்த எம்.எல்.ஏ.க்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். 14 மாதங்களுக்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்தக் கட்சியை ஏன் கைவிட்டனர்? என்ன காரணம்? இமாச்சலில் அல்லாத ஒருவருக்கு அவர்கள் (காங்கிரஸ்) டிக்கெட் கொடுத்தது ஒரு காரணம்" என்று அனுராக் தாக்கூர் கூறினார்.



இமாச்சலப் பிரதேச சட்டசபை நிலவரம்


68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டசபையில் காங்கிரசுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர் மற்றும் மூன்று சுயேச்சைகள் எம்எல்ஏக்கள் உள்ளனர்.


மேலும் படிக்க - ராகுல் காந்திக்கு மட்டும் ஏன் சோதனை? கலங்கும் காங்கிரஸார்! வயநாடு கை கொடுக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ