K Annamalai Speech: தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை என ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "234 சட்டசபை தொகுதிகளையும் குறிவைத்து மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் மோடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்பொழுது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இது ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவே தவிர, இன்னும் நாம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கு. சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுள்ளோம். இத்தனை ஆண்டு காலம் எதற்காக காத்திருக்கிறோம் அதை கண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.,க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை. அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். 2019ல் செய்த தவறை தமிழ்நாடு மீண்டும் செய்ய போவதில்லை. நாடு முழுவதும் 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி 3வது முறையாக மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்பார்" என்றார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே காரணம். அதனால் தான் ஜல்லிக்கட்டு நினைவுப்பரிசும், பாரம்பரியமிக்க மஞ்சளும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
மேலும் படிக்க - 2024ல் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி
தமிழக அரசியல் களத்தை புரட்டிப் போட்டிருக்கும் #EnMannEnMakkal யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தந்திருக்கும் விழா நாயகர் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்.!@annamalai_k @Murugan_MoS #VendumMeendumModi pic.twitter.com/crdutTS3mu
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 27, 2024
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது. தேசியத்தின் பக்கம் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதியின் பங்கும் இருக்கிறது. பல்லடம் ஜவுளி தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருக்கிறது. இந்திய பொருளாதாரமும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
தமிழ்நாட்டில் மட்டும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் கொடுத்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றத்தை அடைந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் வளர்ச்சி அடைந்தது. அதன்பிறகு ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் சிறப்பாக ஆட்சி செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாடு இருந்தபோது எந்த வளர்ச்சியும் அடையவில்லை. 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிஸூடன் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யவில்லை.
இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது. அவர்கள் வெல்ல மாட்டர்கள் என்பது டெல்லிக்கு தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்" எனப் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "வேல் யாத்திரைக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 எம்எல்ஏக்களை பெற்றதுபோல, தற்போது ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மூலம், 39 எம்.பி.க்களை பெறுவோம்" எனக் கூறினார்.
மேலும் படிக்க - திருச்சி சிவா என்னிடம் வெளிப்படையா சொன்னார்: ரகசியத்தை சொன்ன ஹெச் ராஜா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ